• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தவறாக அழுத்தப்பட்ட பட்டன்... நடுவரை திட்டிய ரோஹித் சர்மா...! வைரல் வீடியோ

தவறாக அழுத்தப்பட்ட பட்டன்... நடுவரை திட்டிய ரோஹித் சர்மா...! வைரல் வீடியோ

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

  • News18
  • Last Updated :
  • Share this:
    வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில், டிவி நடுவரின் தவறால், மைதானத்தில் கேப்டன் ரோஹித் சர்மா நிதாதம் இழந்தார்.

    இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டி 20 போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களான லிடன் தாஸ் - முகமது நைம் இணை ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர்.

    6-வது ஓவரை சாஹல் வீசியபோது லிடன் தாசை ஸ்டம்ப் இட் செய்த ரிஷப் பன்ட் பந்தை ஸ்டம்பிற்கு முன்பே பிடித்து அவுட் செய்ததால் அந்த பந்து நோபாலாக அறிவிக்கப்பட்டது. இதனால் லிடன் தாஸ் தப்பினார்.

    முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 60 ரன்கள் குவித்தது. லிடன் தாஸ் 29 ரன்களுக்கும் நைம் 36 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதற்கு பின் வந்த வீரர்கள் திணறினர். சர்காரும், கேப்டன் மெக்முதுல்லாவும் மட்டுமே ஓரளவு நிலைத்து நின்று விளையாடினர்.இருவரும் தலா 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில் சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    154 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். ரோகித் ஷர்மா ஆரம்பம் முதலே வாணவேடிக்கை நிகழ்த்தத் தொடங்கியதால் ரன் மளமளவென உயர ஆரம்பித்தது.

    10-வது ஓவரில் ஹேசைன் பந்துவீச்சில் தொடர்ந்து 3 சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் ரோஹித் சர்மா. இதையடுத்து ஷிகர் தவான் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனாலும் அதிரடியைத் தொடர்ந்த ரோகித் சர்மா 43 பந்துகளில் 85 ரன்களைக் குவித்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதில் 6 சிக்சர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும்.

    அதற்கு பின் களமிறங்கிய லோகேஷ் ராகுலும், ஸ்ரேயாஸ் அய்யரும் எளிதாக இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். 26 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்திய அணி இலக்கை எட்டியது.

    ஆட்டத்தில், வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருந்த போது 6வது ஓவரை சஹால் வீசினார். சஹால் பந்தை இறங்கி வந்து அடிக்க முயற்சித்த லிட்டன் தாஸ் பந்தை தவறவிட்டார். விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தும் வேகமாக ஸ்டெம்பிங் செய்ததால் முதலில் அவுட் கொடுக்கப்பட்டது.

    ஆனால், டிவி ரிப்ளேவில் பார்க்கும் போது பந்து ஸ்டெம்பை கடந்து வருவதற்கு முன்பே ரிஷப் அதனை பிடித்து ஸ்டெம்பிங் செய்வார். இது ஐசிசி விதியை மீறிய செயலாகும். பந்து ஸ்டெம்பை கடக்கும் முன் விக்கெட் கீப்பர் அதை பிடித்து ஸ்டெம்பிங் செய்யக் கூடாது. இதனால் ரிஷப் பந்த் செய்த ஸ்டெம்பிங் நாட் அவுட் என 3வது நடுவரால் அறிவிக்கப்பட்டது. மேலும் நோ பால் என்றும் அறிவிக்கப்பட்டு லிட்டன் தாஸூக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது.



    நடுவரின் முடிவை அடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸ் மீண்டும் ரிஷப் பந்திடம் ரன் அவுட்டாகி 29 ரன்களில் வெளியேறினார். தாஸை ரன்அவுட் செய்தாலும் மிகவும் ஈசியான ஸ்டெம்பிங்கை தவறவிட்ட ரிஷப் பந்தை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.



    இதேபோல, 13-வது ஓவரில் சவுமியா சர்கார் ஸ்டெம்பிங் ஆனார். அப்போதும், டிவி நடுவரின் உதவியை கள நடுவர் நாட, ரீப்ளே பார்க்கும் போது அது அவுட் என்று தெரிந்தது. ஆனால், டிவி நடுவர் தவறான பட்டனை அழுத்த மைதானத்தில் இருந்த திரையில் நாட் அவுட் என்று காட்டியது. இதனால், நிதானம் இழந்த கேப்டன் ரோஹித் சர்மா, டிவி நடுவரை இந்தியில் திட்டினார்.





    இதனை அடுத்து, உடனே டிவி நடுவர் அவுட் கொடுக்க, சர்கார் வெளியேறினார். இதனையும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

    Also See...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: