இந்திய கிரிக்கெட் சங்க வாரியத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 13-ம் தேதி கடைசி நாளாகும். அக்டோபர் 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் வேட்பு மனுவை திரும்ப பெற அக்டோபர் 14-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ தலைவராக கங்குலியும், செயலாளராக ஜெய் ஷாவும் கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்று கொண்டனர். இவர்கள் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில் ஜெய் ஷா மீண்டும் செயலளராக போட்டியிடுகிறார். ஆனால் கங்குலி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை.
கிரிக்கெட் உலக்கின் செல்வாக்கான வாரியமாக பிசிசிஐ இருந்து வருகிறது. அப்படிப்பட்ட பிசிசிஐ-ன் அடுத்த தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற போட்டியில் ரோஜர் பின்னி அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கபடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ரோஜர் பின்னி கர்நாடக கிரிக்கெட் வாரிய தலைவராக உள்ளார். இவர் இந்திய அணிக்காக 1979 முதல் 1987 வரை விளையாடி உள்ளார். கங்குலி அடுத்தப்படியாக பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி தேர்வாக அதிகமான ஆதரவுகள் இருந்து வருகிறது.
Also Read : ஒரே சதத்தில் விராட் கோலியின் சாதனை பட்டியலில் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர்!
சவுரவ் கங்குலி போட்டியிடமால் இருப்பதற்கு ஐசிசி தலைவராக அவர் போட்டியிட உள்ளதே காரணம் என்றும் கூறப்படுகிறது. ஐசிசி தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த பதவிக்கு சவுரவ் கங்குலி போட்டியிட்டால் பிசிசிஐ ஆதரவுடன் அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்பது குறிப்பிடதக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BCCI, Sourav Ganguly