ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பிசிசிஐயின் புதிய தலைவராக ரோஜர் பின்னி நியமனம்; பொருளாளராக பாஜக எம்எல்ஏ தேர்வு

பிசிசிஐயின் புதிய தலைவராக ரோஜர் பின்னி நியமனம்; பொருளாளராக பாஜக எம்எல்ஏ தேர்வு

ரோஹர் பின்னி மற்றும் ஆஷிஷ் ஷெலர்

ரோஹர் பின்னி மற்றும் ஆஷிஷ் ஷெலர்

பிசிசிஐயின் பொருளாளராக மகாராஷ்டிரா மாநில பாஜக எம்.எல்.ஏ ஆஷிஷ் ஷெலர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பிசிசிஐ 36வது தலைவராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்( பிசிசிஐ) 91வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக பி.சி.சி.ஐ. தலைவராக இருந்துவந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு மட்டும் பதவி நீட்டிப்பு செய்யப்படவில்லை.

    அதேநேரத்தில் வாரியத்தின் செயலாளர் பொறுப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா தொடர்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு கங்குலி உடன் ஜெய்ஷா இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: மைதானத்தில் பாய்ந்து பறந்து பீல்டிங் செய்த விராட் கோலி! இணையதளம் முழுவதும் ஆக்கிரமித்துள்ள விராட் வீடியோஸ்!.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 36-வது தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி நியமிக்கப்பட்டுள்ளார். 67 வயதான ரோஜர் பின்னி, கடந்த 1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடியவர்.

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் அந்த மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இந்திய அணிக்காக 27 டெஸ்ட் மற்றும் 72 ஒருநாள் போட்டிகளில் பின்னி விளையாடி உள்ளார். அவர் போட்டியின்றி பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல பொருளாளராக பாஜக எம்.எல்.ஏ ஆஷிஷ் ஷெலர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: BCCI