ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

துபாய் கேபிடல்ஸ் அணிக்காக டி20 போட்டியில் விளையாடும் ராபின் உத்தப்பா…

துபாய் கேபிடல்ஸ் அணிக்காக டி20 போட்டியில் விளையாடும் ராபின் உத்தப்பா…

ராபின் உத்தப்பா

ராபின் உத்தப்பா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 15 சீசன்களில் ஆறு வெவ்வேறு அணிகளுக்காக உத்தப்பா விளையாடியுள்ளார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

துபாய் அணிக்காக டி20 போட்டியில் விளையாடுவதற்கு இந்தியாவின் ராபின் உத்தப்பா ஒப்பந்தம் ஆகியுள்ளார். சர்வதேச மற்றும் இந்திய கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா அறிவித்திருந்த நிலையில், தற்போது வெளிநாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் ராபின் உத்தப்பா ஓய்வை அறிவிப்பதற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச லீக் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் துபாய் கேபிடல்ஸ் அணியில் விளையாட ராபின் உத்தப்பா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த போட்டியை எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு நடத்துகிறது.

நடப்பாண்டில் 1000 ரன்களை கடந்த பாகிஸ்தான் கேப்டன்… டெஸ்ட் போட்டிகளில் சாதனை

அடுத்த ஆண்டு ஜனவரியில், இந்த கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. மொத்தம் 6 அணிகள் இந்த போட்டி தொடரில் பங்கேற்கின்றன. இந்திய கிரிக்கெட்டில் முக்கிய வீரராக வலம் வந்த ராபின் உத்தப்பாவுக்கு 37 வயது ஆகிறது. இந்திய அணிக்கான சர்வதேச போட்டிகள் மற்றும் உள்ளூர் விளையாட்டுக்களில் இருந்து அவர் ஓய்வு அறிவித்திருக்கிறார்.

தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் பங்கேற்க உத்தப்பாவுக்கு அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு, தான் எப்போதும் விரும்புவதாக கூறியுள்ள ராபின் உத்தப்பா, பிசிசிஐ விதிமுறைகள் அவற்றுக்கு இடம் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக். வீழ்த்திய இளம் வீரர்… இங்கிலாந்தின் ரெஹான் அகமது சாதனை

ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக், வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடைபெறும் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட ராபின் உத்தப்பா அழைக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் நடைபெறும் 20 ஓவர் போட்டி தொடரிலும் பங்கேற்பேன் என உத்தப்பா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணிக்காக 46 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், 13 டி20 போட்டிகளிலும் அவர் விளையாடியிருக்கிறார். கடந்த 2006 முதல் 2015 ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 15 சீசன்களில் ஆறு வெவ்வேறு அணிகளுக்காக உத்தப்பா விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cricket