முகப்பு /செய்தி /விளையாட்டு / அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா அறிவிப்பு

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா அறிவிப்பு

ராபின் உத்தப்பா

ராபின் உத்தப்பா

இவர் இந்திய அணிக்காக 2007 உலக கோப்பையையும், ஐபிஎல்யில் 2014ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காகவும் 2021 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் கோப்பைகளை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா அனைத்து விதமான கிரிகெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

இவர் இந்திய அணிக்காக 2007 உலக கோப்பையையும், ஐபிஎல்யில் 2014 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காகவும் 2021 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் கோப்பைகளை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பதிவிட்டுள்ள டுவீட்டில், “நான் 20 வருடங்களாக கிரிகெட் விளையாடி வருகிறேன். நான் என்னுடைய நாட்டுக்காகவும் மாநிலத்திற்காகவும் விளையாடியது மகிழ்ச்சி. இந்த பயணம் ஏற்ற இறக்கங்கள் கொண்ட பயணமாகவும், மனநிறைவான பயணமாகவும், மகிழ்ச்சியாகவும், ஒரு மனிதனாக நான் வளர்வதற்கு எனக்கு உதவிய பயணமாக இருந்தது. ஆனால் எல்லா நல்ல விஷியங்களும் ஒரு முடிவிற்கு வந்தாக வேண்டும். அதனால் நான் அனைத்து விதமான கிரிகெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக முடிவு செய்துள்ளேன். இனி நான் எனது குடும்பத்தினருடன் புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கிறேன்.

மேலும் படிக்க : முகமது ஷமி, உம்ரான் மாலிக் இந்திய அணியில் ஏன் இல்லை? ரசிகர்கள் கடும் விவாதம்

எனது கிரிகெட் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த பிசிசிஐ தலைவருக்கும், செயலாலருக்கும், பிசிசிஐ நிர்வாகிகளுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். மேலும், கர்நாடகா கிரிகெட் சங்கத்திற்கும், சவுராஸ்ட்ரா, கேரளா கிரிகெட் சங்கத்திற்கும் அவர்களுடைய மாநிலத்திற்கு பிரதிநித்திதுவப்படுத்த வாய்ப்பளித்ததற்கு நன்றி கூற விரும்புகிறேன். மேலும், நான் விளையாடிய மும்பை, பெங்களுர், புனே, ராஜஸ்தான் ஆகிய ஐபிஎல் அணிகளுக்கு நன்றி கூற விரும்புகிறேன். சி.எஸ்.கே, கொல்கத்தா அணிகளுக்கு அருமையான நினைவுகளை கொடுத்ததற்காக குறிப்பாக நன்றி கூற விரும்புகிறேன். உங்களுடன் இருந்த நினைவுகள் என் மனதை விட்டு அகலாது.

என்னுடைய பெற்றோர்களுக்கும், சகோதரிக்கும் என்னுடைய கனவை நான் தொடர அனுமதித்ததற்கும், நீங்கள் அதற்காக செய்த தியாகத்திற்கும் நன்றி. அதனால் தான் நான் தேர்ந்தெடுத்த துறையில் என்னால் வெற்றி பெற முடிந்தது.

எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஆதரவு தந்து இவ்வளவு தூரம் கொண்டு வந்த எனது பயிற்சியாளருக்கும், மற்றும் வழிகாட்டிய அத்தனை நபர்களுக்கும் எனது மிகப்பெரிய நன்றிகள்.

மேலும் படிக்க : கோலியை ரிட்டையர் ஆகச்சொல்ல நீ யார்?- ஷாகித் அப்ரீடிக்கு வலுக்கும் எதிர்ப்பு

எனக்கு ஊக்கமளித்து என்னுடன் விளையாடிய அணி வீரர்களுக்கும், பிசியோகளுக்கும், உதவியாளர்களுக்கும், பெரிய நன்றிகள்.

மேலும் என்னுடைய ரசிகர்களும், என் நல விரும்பிகளும், நண்பர்களும், ஆதரித்தவர்களும், எதிர்த்தவர்களும், பத்திரிக்கையாளர்களும், இத்தனை ஆண்டுகளாக கொடுத்த அன்பு அனைத்திற்கும் நன்றி. உங்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். உங்கள் எல்லோருக்கும் நன்றி.” இவ்வாறு அவர் பதிவிட்டு தன் ஓய்வை அறிவித்திருக்கிறார்.

First published:

Tags: Indian cricket team, IPL, Retirement