• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பழைய பரமசிவமாக கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய சச்சின் - சேவாக் கூட்டணி: வங்கதேசத்தை புரட்டி எடுத்த சேவாக்!

பழைய பரமசிவமாக கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய சச்சின் - சேவாக் கூட்டணி: வங்கதேசத்தை புரட்டி எடுத்த சேவாக்!

சச்சின் - சேவாக்

சச்சின் - சேவாக்

ஆட்டத்தை தொடங்கிய சேவாக் வங்கதேச பவுலர் ரஃபீக்கின் முதல் ஓவரில் வீசிய முதல் இரண்டு பந்துகளிலும் பவுண்டரி விளாசிய மிரட்டினார்.

  • Share this:
சாலை பாதுகாப்பு சீரிஸ் கிரிக்கெட் தொடரில் சச்சின், சேவாக் கூட்டணியின் அதிரடி பேட்டிங்கால் வங்கதேச லிகெண்ட்ஸ் அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய லிகெண்ட்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

கிரிக்கெட் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் தனக்கென தனி முத்திரை பதித்து அதிரடி காட்டி இந்திய ரசிகர்களை ஈர்த்தார் வீரேந்திர சேவாக். இப்போதெல்லாம் டி20 போட்டிகளில் தான் அதிரடி ஆட்டத்தை காண முடியும், ஆனால் டெஸ்ட் போட்டிகளிலேயே டி20 பாணியை கடைப்பிடித்தவர் சேவாக். சச்சின், சேவாக் உள்ளிட்ட வீரர்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் கூட கடந்த ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வரும் சாலை பாதுகாப்பு டி20 உலக சீரிஸில் இவர்களின் ஆட்டத்தை காண நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, வங்கதேசம், மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து என 6 அணிகள் கலந்து கொள்கின்றன. சச்சின், சேவாக், பிரையன் லாரா, பிரெட் லீ, கெவின் பீட்டர்சன் போன்ற ஓய்வு பெற்றுவிட்ட முன்னாள் வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தடை பட்ட இத்தொடர் இந்த ஆண்டு மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடங்கி உள்ளது. ராய்பூரில் உள்ள புதிய மைதானத்தில் மட்டும் இத்தொடர் நடத்தப்படுகிறது. கொரோனா காரணமாக 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சாலை பாதுகாப்பு டி20 உலக சீரிஸில் நேற்று மாலை வங்கதேசம் மற்றும் இந்திய லிகெண்ட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 19.4 ஓவர்களில் 109 ரன்கள் எடுத்தது. வினய் குமார், பிரக்யான் ஓஜா, யுவ்ராஜ் சிங் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

110 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்வதற்காக முன்னாள் வெற்றிக் கூட்டணியான சச்சின் மற்றும் சேவாக் களம் இறங்கினர்.

ஆட்டத்தை தொடங்கிய சேவாக் வங்கதேச பவுலர் ரஃபீக்கின் முதல் ஓவரில் வீசிய முதல் இரண்டு பந்துகளிலும் பவுண்டரி விளாசிய மிரட்டினார். அதன் பிறகு அவரின் அதிரடியை நிறுத்தவே இல்லை. 20 பந்துகளிலேயே அரை சதம் கண்ட சேவாக் பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசித் தள்ளினார். மறுமுனையில் சேவாக்கிற்கு உறுதுணையான வகையில் சச்சின் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சச்சின் 26 பந்துகளில் 33 ரன்களும் , சேவாக் 35 பந்துகளில் 80 ரன்களும் விளாசி வெற்றி பெற வைத்தனர். இந்திய லிகெண்ட்ஸ் அணி 10.1 ஓவர்களில் வெற்றி பெற்றது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: