முகப்பு /செய்தி /விளையாட்டு / 'தல' பற்றிய அழகிய தருணங்கள்! ஆர்.ஜே.பாலாஜியின் சுவாரஸ்ய வீடியோ

'தல' பற்றிய அழகிய தருணங்கள்! ஆர்.ஜே.பாலாஜியின் சுவாரஸ்ய வீடியோ

ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் 'தல' என்று சொன்னவுடன் நினைவுக்கு வருபவர் அஜித் குமார். அவருக்கு அடுத்து கிரிக்கெட்டில் ரசிகர்களால் 'தல' என்று கெத்தாக அழைக்கப்படுபவர் தோனி.

மகேந்திர சிங் தோனி நேற்று தனது 38வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். தோனிக்கு ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் பலர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

#HappyBirthdayMSD என்ற ஹேஸ்டேக் தான் ட்விட்டரில் நாள் முழுவதும் டிரெண்டிங்கில் இருந்தது. தோனி கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.

உலகக் கோப்பை தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தமிழ் வர்ணனையாளராக ஆர்.ஜே.பாலாஜி உள்ளார். தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 7 அழகிய தருணங்களை பற்றி பேசி  ஆர்.ஜே.பாலாஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தோனியின் நீளமான கூந்தல், உலகக் கோப்பையை மற்ற வீரர்கள் கையில் ஒரு ஓரமாக நின்ற போஸ் கொடுத்தது என தோனியின் அழகிய தருணங்களை ஆர்.ஜே.பாலாஜி நினைவு கூர்ந்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் அவர் நம்மை வழிநடத்தும் பெரிய தலைவராக வருவார் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

Also Watch

First published:

Tags: MS Dhoni, RJ Balaji