ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்த் பங்கேற்க வாய்ப்பில்லை… மாற்று வீரர்களை பரிசீலிக்கும் பிசிசிஐ

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்த் பங்கேற்க வாய்ப்பில்லை… மாற்று வீரர்களை பரிசீலிக்கும் பிசிசிஐ

ரிஷப் பந்த்

ரிஷப் பந்த்

இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களே உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விபத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து மாற்று வீரர்கள் குறித்த பரிசீலனையில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. வங்கதேச கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்த தொடரையடுத்து, இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அந்த வகையில் இந்த 4 போட்டிகளும் விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே எதிர்பாராத விதமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். அவர் மீண்டு வந்து உடல் தகுதி பெற்று அணிக்கு திரும்ப நீண்ட நாட்கள் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவர் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஷான் கிஷன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கலக்கி வருவதால் சஞ்சு சாம்சனுக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படலாம். ஆனால், இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களே உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதேபோன்று இந்தியா ஏ அணியில் இடம்பெற்றுள்ள விக்கெட் கீப்பர் கோனா பரத் அல்லது உபேந்திர யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இதனை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்வுக்குழு முடிவு செய்யும்.

‘உலகக்கோப்பை வருகிறது… ஓய்வு நாட்களை எதிர்பார்க்காதீர்கள்…’ – விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு கவுதம் காம்பீர் அட்வைஸ்…

ஒட்டுமொத்தமாக ரிஷப் பந்த் இடத்தில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், உபேந்திரா யாதவ், கோனா பரத் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பாண்ட்யா சகோதரர்கள் சந்திப்பு…

இவர்களில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளது.

First published:

Tags: Rishabh pant