ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

'என்னென்றும் நன்றிக்கடன் பட்டவன்' - காப்பாற்றிய இளைஞர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன ரிஷப் பண்ட்!

'என்னென்றும் நன்றிக்கடன் பட்டவன்' - காப்பாற்றிய இளைஞர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன ரிஷப் பண்ட்!

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

விபத்தின் போது தன்னை காத்து உதவி செய்த இரு இளைஞர்களை ரிஷப் பண்ட் மருத்துவமனைக்கு அழைத்து நேரில் நன்றி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Maharashtra, India

இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கடந்த மாதம் கார் விபத்துக்குள்ளாகி படுகாயத்திற்கு ஆளானார். டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சாலை தடுப்பு மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. படுகாயங்கயமடைந்த ரிஷப் பண்ட் டேராடூன் மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சை பெற்றார்.

பின்னர் சில நாள்களில் உயர் சிகிச்சைக்காக மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரிஷப் பண்ட்டிற்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் ஓய்வு பெற்று வரும் ரிஷப் பண்ட் விபத்துக்குப் பின் முதல் முறையாக சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது விபத்தில் தனது உயிரை காத்த இரு இளைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பதிவாகும். கார் விபத்தில் படுகாயம் அடைந்து சாலையில் கிட்ட ரிஷப் பண்ட்டை அப்பகுதியைச் சேர்ந்த ரஜத் குமார் மற்றும் நிஷூ குமார் என்ற இரு இளைஞர்கள் தான் மீட்டு மருத்துமனையில் சேர்த்துள்ளனர். அவர்கள் நேற்று ரிஷப் பண்ட் மருத்துவமனைக்கு வரவழைத்து நன்றி தெரிவித்துள்ளார்.

அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் அந்த புகைப்படத்தை வெளியிட்ட ரிஷப் பண்ட், "நான் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல முடியாது, அதேவேளை, விபத்தின் போது எனக்கு உதவி செய்த இரண்டு ஹீரோக்களான ரஜத் குமார் மற்றும் நிஷூ குமாருக்கு என்னென்றும் நன்றிக்கடன் பட்டவன்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

மேலும், "எனக்கு ஆதரவாக இருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. எனது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது என்பதை கூற விரும்புகிறேன். தினம்தோறும் எனது உடல்நலம் தேறி வருகிறது. இந்த கடினமான வேலையில், அன்பு வார்த்தைகள் கூறி, பாசிடிவ் எனர்ஜி தரும் உங்கள் அனைவருக்கும் நன்றி" என ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் ரிஷப் பண்ட் நன்றி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Cricket, Rishabh pant, Twitter