ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மேல்கிகிச்சை.. ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ரிஷப் பண்ட்!

மேல்கிகிச்சை.. ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ரிஷப் பண்ட்!

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள பிரபல கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பண்ட் மாற்றப்பட்டு சிகிச்சை பெற உள்ளார் ரிஷப் பண்ட்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India

கார் விபத்தில் காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மாற்றப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பயணம் செய்த கார், கடந்த 30-ம் தேதி, தனது தாயை பார்க்க சென்ற போது உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட், டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு மூளை மற்றும் தண்டுவடத்தில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், நெற்றியில் ஏற்பட்ட வெட்டு காயத்திற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனியறைக்கு மாற்றப்பட்ட ரிஷப் பண்ட், கை மற்றும் காலில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தற்போதைய தகவலின்படி ரிஷப் பந்த்தால் சரியான முறையில் நடக்க முடியவில்லை என்று தெரியவருகிறது. மும்பையில் பிசிசிஐ மருத்துவர்கள் பந்த்திற்கு சிகிச்சை அளிப்பார்கள் என கூறபட்டுள்ளது. அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டதில் முதுகுத் தண்டு, மூளை ஆகியவற்றிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள பிரபல கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பண்ட் மாற்றப்பட்டுள்ளார். மும்பை மருத்துவமனையில் ரிஷப் பண்டிற்கு காலில் ஏற்பட்ட தசை சிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் ரிஷப் பண்ட்டின் சிகிச்சைக்கான முழு செலவையும் ஏற்பதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷியாம் சர்மா, ‘விபத்து ஏற்பட்டதில் இருந்து ரிஷப் பந்தின் குடும்பத்தினருடன் நான் தொடர்பில் இருக்கிறேன். அவரது மூட்டின் இணைப்பில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதனை குணப்படுத்த அவரை மும்பை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்’ என்று கூறியுள்ளார்.

First published:

Tags: BCCI, Hospitalised, Mumbai, Rishabh pant