Home /News /sports /

இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் செய்த காரியத்தால் களத்தில் கலகல!

இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் செய்த காரியத்தால் களத்தில் கலகல!

rishabh pant

rishabh pant

ஜேம்ஸ் ஆண்டர்சன் ரகானேவுக்கு பந்து வீசுவதற்காக ஓடி வந்து கொண்டிருந்த போது அதை கவனிக்காத ரிஷப் பந்த், தன் நிழலை பார்த்தவாறு பேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கிடையிலான 2 போட்டிகளில் ஒன்றில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஒரு போட்டி ட்ராவில் முடிந்தது.

3வது டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ரோகித் 19 ரன்களும், ரகானே 18 ரன்களும் மட்டுமே எடுத்திருந்தனர். அதே நேரத்தில் முதல் இன்னிங்ஸில் 432 ரன்கள் குவித்தது இங்கிலாந்து அணி. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்தார்.

இதையடுத்து 354 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 278 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சதத்தை நெருங்கிய புஜாரா 91 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மாவும், கேப்டன் விராட் கோலியும் அரை சதம் அடித்தனர். பிற வீரர்கள் யாருமே இந்த போட்டியில் சொல்லிக்கொள்ளும் வகையில் ரன்கள் குவிக்கவில்லை.

இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி கண்டது. இப்போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 7 விக்கெட்கள் சாய்த்த இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஒலி ராபின்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.இந்த போட்டியின் போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் களத்தில் செய்த செயல் ரசிகர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளவாசிகளிடமும் கவனத்தை பெற்றுள்ளது.

Also Read: வகுப்பில் பாதி மாணவர்களுக்கு கொரோனாவை பரப்பிய ஆசிரியர்!

நேற்றைய போட்டியில் விராட் கோலி அவுட் ஆனது களத்தில் ரகானேவுடன் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தார் ரிஷப் பந்த். அப்போது ரகானே பேட்டிங் முனையில் இருக்க நான் ஸ்ட்ரைக்கர் முனையில் ரிஷப் பந்த் இருந்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன் ரகானேவுக்கு பந்து வீசுவதற்காக ஓடி வந்து கொண்டிருந்த போது அதை கவனிக்காத ரிஷப் பந்த், தன் நிழலை பார்த்தவாறு பேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.

பின்னர் திடீரென பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச ஓடி வருவதைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட ரிஷப் பந்த், சட்டென திரும்பிவிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Also Read:   மனைவியின் அந்தரங்க உறுப்புக்கு ஊசி நூலால் தையல் போட்ட ‘சந்தேக பேர்வழி’ கணவர்!

அதே நேரத்தில் இந்த போட்டியில் நல்ல ஃபார்மில் இல்லாத ரிஷப் பந்தை ரசிகர்களும் வறுத்தெடுத்து வருகின்றனர். கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் ரிஷப் பந்தை கடுமையாக சாடி வருகின்றனர். இந்தப் போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த தவறிய ரிஷப் பந்த், 5 இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமே 87 ரன்களே எடுத்தார். அவரின் பேட்டிங் சராசரி 17.40% மட்டும் தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெளிநாட்டு மண்ணில் விளையாடும் டெக்னிக் தெரியாதவராக ரிஷப் பந்த் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
Published by:Arun
First published:

Tags: Rishabh pant

அடுத்த செய்தி