ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா இன்னிங்சைக் கண்டு களித்தேன் - முன்னாள் பாகிஸ்தான் ஸ்பின்னர்
ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா இன்னிங்சைக் கண்டு களித்தேன் - முன்னாள் பாகிஸ்தான் ஸ்பின்னர்
ரிஷப் பந்த்
இங்கிலாந்துக்கு எதிராக ஓல்ட் ட்ராபர்டில் நடைபெற்ற 3வது, இறுதி ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்ட் திறமை மற்றும் ரிஷப் பண்ட்டின் அருமையான சதம் ஆகியவற்றால் இந்தியா ஒருநாள் தொடரை வென்றது. இந்த இன்னின்சை பார்த்து ரசித்த பாகிஸ்தான் முன்னாள் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா, பண்ட்- பாண்டியா கூட்டணியை 2002 நாட்வெஸ்ட் டிராபி இறுதிப் போட்டியை வென்றபோது களத்தில் சேர்ந்து விளாசிய யுவராஜ் சிங்- கயீஃப் கூட்டணியை நினைவுபடுத்துவது போல் இருந்தது என்றார்.

21/2 என்ற நிலையில் ரிஷப் பண்ட் களமிறங்கினார், அவர் ஒரு முனையில் நிற்க ஸ்கோர் 72/4 என்று தடுமாறியது இந்திய அணி. 260 ரன்கள் இலக்கை எட்ட முடியாது என்று நினைத்த வேளையில் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் கூட்டணி 133 ரன்களை அதிரடியாகச் சேர்த்து அணியை வெற்றிக்கு இட்டு சென்றனர்.
2002 நாட்வெஸ்ட் இறுதிப் போட்டியிலும் இந்திய அணியின் டாப் ஆர்டர் சொதப்ப இந்தியா 146/5 என்று சரிந்தது. இலக்கு 326 ரன்கள். இந்நிலையில் ஜோட் சேர்ந்த யுவராஜ், கைஃப் ஜோடி 123 ரன்களை விரைவு கதியில் எடுக்க ஆட்டம் இந்தியா பக்கம் மாறி நாட்வெஸ்ட் ட்ராபியை இந்தியா வென்றது.
இது குறித்து டேனிஷ் கனேரியா கூறியதாவது:
பண்ட்-பாண்டியா கூட்டணி எனக்கு நாட்வெஸ்ட் 2002 தொடரின் இறுதிப் போட்டியில் ஆடிய யுவராஜ் சிங், கைஃப் ஜோடியை நினைவூட்டியது. அன்றும் கூட டாப் ஆர்டர் வீழ்ச்சியடைந்தது. அப்போது இளம் வீரர்களான யுவராஜ், கைஃப் அணியை வெற்றி பெறச் செய்தனர்.
இப்போது பண்ட், பாண்டியா ஆடியதும் எனக்கு அந்த இன்னிங்ஸையே நினைவூட்டியது. ரிஷப் பண்ட் முதிர்ச்சியுடன் ஆடினார். அவர் உலகத் தரம் வாய்ந்த வீரராக திகழப்போகிறார். திறமையில் அவருடன் ஒப்பிட வெகு சிலரே உள்ளனர். 100ரன்களை 200 ஆக மாற்றும் திறன் ரிஷப் பண்ட்டிடம் உள்ளது. அந்த மாதிரி பெரிய பிளேயர் அவர்.
என்றார் டேனிஷ் கனேரியா.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.