2018-ம் ஆண்டுக்கான ஐசிசி வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றார் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.
2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை அளித்த வீரர்களுக்கான விருதுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்தது. அதன்படி, 2018-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர், ஐசிசி டெஸ்ட் போட்டி வீரர், சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் ஆகிய மூன்று விருதுகளை விராட் கோலி வென்றுள்ளார்.

டெஸ்ட் கோப்பையை முத்தமிடும் விராட் கோலி. (Reuters)
அத்துடன், ஒரே ஆண்டில் 3 ஐசிசி விருதுகளை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். மேலும், சிறந்த டெஸ்ட் கேப்டன், சிறந்த ஒரு நாள் போட்டி கேப்டன் ஆகிய 2 விருதுகள் என மொத்தம் 5 விருதுகளை கோலி வென்றுள்ளார்.
2018-ம் ஆண்டுக்கான ஐசிசி வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றார் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். கடந்த 2018-ம் இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ரிஷப் பண்ட், 5-வது டெஸ்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

ஒரே சதத்தில் பல சாதனைகளை செய்த ரிஷப் பண்ட். (Twitter)
அண்மையில், சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 159 ரன்களை விளாசிய அவர், பல்வேறு சாதனைகளை முறியடித்தார். அத்துடன், அடிலெய்டில் நடந்த டெஸ்டில் 11 கேட்ச்கள் பிடித்து உலக சாதனையைச் சமன் செய்தார்.
இவரது சாதனைகளை கவுரவிக்கும் விதமாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2018-ம் ஆண்டுக்கான எமெர்ஜிங் கிரிக்கெட் வீரர் விருதை அறிவித்துள்ளது. அத்துடன், ஐசிசி டெஸ்ட் உலக லெவன் அணியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் பெயரும் இடம் பெற்றுள்ளது.
ஒரே ஆண்டில் 5 ஐசிசி விருதுகளை வென்று கோலி உலக சாதனை!
Also Watch...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.