• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ரிஷப் பண்ட் குழம்பிப் போயிருக்காரு, ஒரு வேளை டி20-யிலிருந்து ட்ராப் பண்ணிடுவாங்களோ?

ரிஷப் பண்ட் குழம்பிப் போயிருக்காரு, ஒரு வேளை டி20-யிலிருந்து ட்ராப் பண்ணிடுவாங்களோ?

ரிஷப் பண்ட்.

ரிஷப் பண்ட்.

ரிஷப் பண்ட்டிற்கு பதில் வேறு வீரரை அணி நிர்வாகம் தேர்வு செய்யலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்கிறார் டேனியல் வெட்டோரி.

  • Share this:
    நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா ஒயிட் வாஷ் செய்த டி20 தொடர் 3-0 வெற்றியில் அதிரடி மன்னன் ரிஷப் பண்ட் 3 இன்னிங்ஸ்கள்ல் 33 ரன்களை மட்டுமே எடுத்தார். இதனையடுத்து டி20 அணியில் ரிஷப் பண்ட்டிற்கு பதில் வேறு வீரரை அணி நிர்வாகம் தேர்வு செய்யலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்கிறார் டேனியல் வெட்டோரி.

    இந்நிலையில் நியூசிலாந்து முன்னாள் கேப்டனும் இடது கை ஸ்பின்னருமான டேனியல் வெட்டோரி அணியில் அவரது ரோல் என்னவென்பதை அவருக்கு சரியாக விளக்கவில்லை. இதனால் ஒன்று அதீத எச்சரிக்கையுடன் ஆடுகிறார், இல்லையெனில் பொறுப்பற்ற முறையில் அலட்சியமாக ஆடி அவுட் ஆகிறார் என்கிறார் டேனியல் வெட்டோரி.

    முதல் 2 டி20 போட்டிகளில் அவருக்கு சான்ஸ் குறைவாகவே இருந்தது, அவர் இறங்கும்போது அதிக ரன்கள் வேண்டியிருக்கவில்லை, 2வது போட்டியில் ஜேம்ஸ் நீஷமை ஒரு மிட்விக்கெட் சிக்சும், அவரது டிரேட் மார்க் ஒத்த கை சிக்சரும் அடித்து வெற்றி பெறச் செய்ததை மறக்க முடியாது, அவரைப்போய் பினிஷிங் ரோலில் வைத்தால் அவருக்கு புரியவில்லை என்கிறார் டேனியல் வெட்டோரி, அவரை அதிரடி பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தினால் நிச்சயம் அவரிடமிருந்து இன்னும் சிறப்பான பங்களிப்புகள் தொடரும்.

    ஆனால் 3வது போட்டியில் ரிஷப் பண்ட் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். மொத்தமாக 41 டி20 சர்வதேசப் போட்டிகளில் ரிஷப் பண்ட் 623 ரன்களையே 23.07 என்ற சராசரியில் எடுத்துள்ளார், இது அவரைப்போன்ற திறமைசாலிகளுக்கு போதவே போதாது. ஸ்ட்ரைக் ரேட் 122.87. ரிஷப் பண்ட் டி20-யில் தனது வேகத்தை சரியாக அவர் அமைப்பதில்லை என்கிறார் டேனியல் வெட்டோரி.

    “பண்ட் தனது டெம்போவை டி20-யில் சரியாக வைத்துக் கொள்ள முடியவில்லை. அவருக்கு தன் ரோல் என்னவென்பது புரியவில்லை, குழப்பத்தில் இருக்கிறார். சில வேளைகளில் அதீதமான எச்சரிக்கையுடன் ஆடுகிறார், சில வேளைகளில் பொறுப்பற்று அலட்சியமாக ஆட்டமிழக்கிறார். அவரது ஆட்டத்தில் ஒரு விறுவிறுப்புத் தன்மையோ, சரளமோ இருப்பதாக அவர் உணரவில்லை. அவர் ரிதமுக்கு வர முடியவில்லை.

    எனவே சரியான ஒரு வேகத்தன்மையை அவர் தன் ஆட்டத்திற்கு அமைத்துக் கொள்வது அவர் கையில்தான் உள்ளது. பண்ட் இதைச் செய்யவில்லை எனில் டீமை விட்டு தூக்கிட்டு வேறு ஒருவரை கொண்டு வருவார்கள். இஷான் கிஷன், கே.எல்.ராகுலும் கீப்பிங் செய்வார்கள் என்பதை ரிஷப் பண்ட் மறந்து விடக்கூடாது. இந்திய நிர்வாகத்துக்கும் தெரியும் பண்ட் பேட்டிங் என்றால் ஆட்டத்தின் போக்கு விரைவில் மாறும் என்பது எனவே ரிஷப் பண்ட் கையில்தான் எல்லாம் இருக்கிறது.” என்கிறார் டேனியல் வெட்டோரி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: