HOME»NEWS»SPORTS»cricket rishabh pant feels amazing on ms dhoni comparisons aru

‘ஒரு இளம் வீரனை ஜாம்பவானுடன் ஒப்பிட்டு பேசுவது சரியாக இருக்காது’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பந்த் அதிரடி கருத்து!

ஆஸ்திரேலிய அணியுடனான இந்திய அணியின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தொடர்ந்து முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன், விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ரிஷப் பந்த்-ஐ ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

‘ஒரு இளம் வீரனை ஜாம்பவானுடன் ஒப்பிட்டு பேசுவது சரியாக இருக்காது’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பந்த் அதிரடி கருத்து!
ரிஷப் பந்த்
  • Share this:

ஆஸ்திரேலிய அணியுடனான இந்திய அணியின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தொடர்ந்து முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன், விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ரிஷப் பந்த்-ஐ ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.. இது தொடர்பாக ரிஷப் பந்த் என்ன கூறுகிறார்?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் செய்த சாதனைகள் மிகப்பெரியது. கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து தோனி விடைபெற்ற பின்னர் அவருக்கு இணையான ஒரு நபர் இனி கிடைப்பாரா என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் கவலையாக இருந்தது.

தோனியின் இடத்தை ரிஷப் பந்த் நிரப்புவார் என பலரும் ஒப்பிட்டு கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர். ஆனால் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் அக்கருத்துக்களை மெய்ப்பிக்கும் விதமாக ரிஷப் பந்த்-ன் ஆட்டம் அமைந்தது.



மேலும் படிக்க.... ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஆடியதிலேயே இந்திய அணியைப் போல் தைரியம் காட்டிய ஆசிய அணி இல்லை: வாசிம் அக்ரம் பாராட்டு

23 வயது ஆன ரிஷப் பந்த் ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வரலாற்று சிறப்பான வெற்றியை பெற உதவிய 4வது டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் 89 ரன்கள் எடுத்தார். மேலும் சிட்னியில் நடந்த 3வது போட்டியில் 97 ரன்கள் எடுத்து இந்திய அணி டிரா செய்ய உதவிகரமாக இருந்தார். அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்திய ரிஷப் பந்த்-ஐ சமூக வலைத்தளங்களில் தோனியுடன் ஒப்பிட்டு வாழ்த்துவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பிய ரிஷப் பந்திடம் இது தொடர்பாக பத்ரிகையாளர்கள் கேட்டதற்கு, “தோனியுடன் என்னை ஒப்பிடுவது அற்புதமானது, ஆனால் யாருடனும் ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை. இந்திய அணியில் எனக்கென ஒரு பேரை உருவாக்க விரும்புகிறேன். ஒரு இளம் வீரனை ஜாம்பவானுடன் ஒப்பிட்டு பேசுவது சரியாக இருக்காது என தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணியுடனான தொடரில் இந்திய அணி ஆடிய விதம் ஒட்டுமொத்த அணி வீரர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் ரிஷப் பந்த் கூறினார்.

முதல் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்குள் சுருண்டு முக மோசமான முறையில் தோல்வியை சந்தித்த இந்திய அணி, கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் 8 பேர் அணியில் இடம்பெறாத சூழலிலும் தோல்விப்பாதையில் இருந்து வெற்றி பெற்று தொடரையும் வென்று திரும்பியிருப்பது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Published by:Arun
First published: