ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பனி படர்ந்த மலையில் தோழியுடன் புத்தாண்டு கொண்டாடிய ரிஷப் பந்த் - வைரல் புகைப்படம்

பனி படர்ந்த மலையில் தோழியுடன் புத்தாண்டு கொண்டாடிய ரிஷப் பந்த் - வைரல் புகைப்படம்

Rishab Pant | Isha Negi | NewYear 2020 | ரிஷப் பந்து தனது தோழி இஷா நேகி உடன் பனிபடர்ந்த மலையில் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கக்தில் பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தனது தோழியான இஷா நேகி உடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். கேப்டன் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சுவிட்சர்லாந்திலும், தோனி அவரது மனைவி சாக்ஷியுடன் புத்தாண்டு இரவு டான்ஸ் கொண்டாடிய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியானது.

Also Read : இரவு பார்ட்டி... சாக்‌ஷியுடன் டான்ஸ்... தல தோனியின் புத்தாண்டு கொண்டாட்டம் - வீடியோ

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நடிகை நடாசாவிடம் தனது காதலை வெளிப்படுத்தி புத்தாண்டு அன்று வீடியோ வெளியிட்டார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்து தனது தோழி இஷா நேகி உடன் பனிபடர்ந்த மலையில் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கக்தில் பதிவிட்டுள்ளார்.
 
View this post on Instagram
 

I like me better when I’m with you 🧡🤷🏻‍♂


A post shared by Rishabh Pant (@rishabpant) onஅந்த புகைப்படத்தில் “நான் உன்னுடன் இருக்கும் போது என்னை எனக்கு அதிகமாக பிடிக்கிறது“ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதே புகைப்படத்தை இஷா நேகியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு “ 5வது ஆண்டாக தொடர்கிறது. உன்னை மிகவும் விரும்பகிறேன்“ என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Cricket, Rishabh pant