Home » News » Sports » CRICKET RISHABH PANT DOES A KIP UP ON THE FIELD LEAVES FANS IN AWE WATCH

VIDEO: சேட்டை பிடிச்ச பையன் சார்.. ரிஷப் பண்ட் செய்த காரியம்!

#RishabhPant does a kip-up on the field | 21 வயதேயான ரிஷப் பண்ட், ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்த ஆசிய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார்.

VIDEO: சேட்டை பிடிச்ச பையன் சார்.. ரிஷப் பண்ட் செய்த காரியம்!
மைதானத்தில் டைவ் அடித்த ரிஷப் பண்ட். (Video Grab)
  • News18
  • Last Updated: January 4, 2019, 5:01 PM IST
  • Share this:
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் மைதானத்தில் செய்த சண்டைப் பயிற்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. புஜாரா சதத்தால் இந்திய அணி முதல் நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது.

2-வது நாளில் புஜாரா 193 ரன்கள் எடுத்து வெளியேற, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் டெஸ்ட் அரங்கில் தனது 2-வது சதத்தையும், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் சதத்தையும் பதிவு செய்தார். பின்னர் வந்த ஜடேஜா தனது பங்கிற்கு 81 ரன்கள் சேர்க்க, 622 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை இந்திய அணி டிக்ளேர் செய்தது.


Rishabh Pant, ரிஷப் பண்ட், Jadeja
சதம் அடித்த ரிஷப் பண்டை பாராட்டும் ஜடேஜா. (BCCI)


21 வயதேயான ரிஷப் பண்ட், ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்த ஆசிய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன், ஆஸ்திரேலியாவில் அதிக ரன்கள் அடித்த 2-வது வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் செய்தார். 2012-ல் டி வில்லியர்ஸ் 169 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

Rishabh Pant, ரிஷப் பண்ட்
சர்வதேச டெஸ்ட் அரங்கில் 2-வது சதத்தை பதிவு செய்தார் ரிஷப் பண்ட். (BCCI)
2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது, சண்டைக் காட்சிகளில் வருவதுபோல் தரையில் படுத்திருந்த ரிஷப் பண்ட் பல்டி அடித்து மேலே எழுந்தார்.











இவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

சிட்னி டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்து இந்திய அணி இமாலய ரன்கள் குவிப்பு!

Also Watch...

First published: January 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading