ரிஷப் பண்ட்டிடம் ரூ.1.63 கோடி மோசடி செய்து ஏமாற்றிய கிரிக்கெட் வீரர் மீது மோசடி புகார் கொடுக்கபட்டுள்ளது. ஹரியானாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் மிரினான்க் சிங். இவர் விலையுயர்ந்த வாட்ச், மொபைல் ஃபோன்கள் உள்ளிட்ட பல பொருட்களை வாங்கி, விற்கும் வியாபாரம் செய்வதாக கூறி ரிஷப் பண்ட்டை அணுகியுள்ளார். மிரினங்க் சிங் ஹரியாணாவுக்கு கிரிக்கெட் ஆடியவர்தான்.
இவர் ஏற்கெனவே தொழிலதிபர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் தான் தண்டனை அனுபவித்தவர்தான்.
இதற்கிடையில் மிரினாங்க் கொடுத்த ரூ.1.63 கோடி காசோலையும் பவுன்ஸ் ஆக ரிஷப் பண்ட்டின் மேலாளர் புனித் சோலங்கி மிருனாங்கிற்கு எதிராக புகார் அளித்தார். பண்ட்டின் வழக்கறிஞர் ஏக்லவ்யா திவேதி இது சம்பந்தமான தொடர் சம்பவங்கள் குறித்துக் கூறினார். , ரிஷப் பண்ட் மிருனாங்கை மண்டல கிரிக்கெட் அகாடமி முகாமில் சந்தித்தார்.
திவேதி கூறும்போது, “இது உண்மையில் மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் கீழ் வருவதாகும். இதன்படி மிரினாங்க் சிங் கொடுத்த செக் போதிய பணம் அக்கவுண்டில் இல்லாததால் மதிப்பிழந்தது. இவர்கள் இருவரும் 2020 அல்லது 2021-ல் சந்தித்துள்ளனர். இவர் ரிஷப் பண்ட்டுக்கு கிரிக்கெட் மூலம் தெரியவந்தார். மண்டல கிரிக்கெட் அகாடமி முகாமில் மிரிணாங்கும் ரிஷப் பண்ட்டும் சந்தித்த போது இருவருக்கும் இந்த வர்த்தக பரிவர்த்தனை நடந்திருக்கிறது” என்றார்.
ஏற்கனவே சில கிரிக்கெட் வீரர்களுக்கு விலையுயர்ந்த வாட்ச், அணிகலன்களை வாங்கி கொடுத்திருப்பதாக சில ஆதாரங்களையும் அவர் காட்டியதால், ரிஷப் பண்ட்டும் அவரை நம்பியிருக்கிறார்.
ரிஷப் பண்ட்டிடம் தள்ளுபடி விலையில் விலையுயர்ந்த வாட்ச் வாங்கித்தருவதாக கூறி பணம் பெற்றுள்ளார். ரிஷப் பண்ட் விற்க நினைத்த அவரது 2 விலையுயர்ந்த வாட்ச்களையும் மிரினான்க் சிங்கிடம் கொடுத்துள்ளார்.
ரூ.36.25 லட்சம் மதிப்புள்ள பிராங்க் முல்லர் வான்கார்ட் யாச்சிங் சீரிஸ் வாட்ச் மற்றும் ரூ.62.60 லட்சம் மதிப்புள்ள ரிச்சர்ட் மில்லே வாட்ச் ஆகிய 2 வாட்ச்களையும் அவரிடம் கொடுத்ததுடன், தனக்கு தேவையானவற்றை வாங்குவதற்காக ரூ.2 கோடி கொடுத்திருக்கிறார்.
ஆனால் சிங் எதையுமே வாங்கிக்கொடுக்காததால், கடைசியில் அந்த டீலை முடித்துக்கொண்டு ரூ.1.63 கோடியை ரிஷப் பண்ட்டுக்கு அவர் கொடுப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த தொகைக்கு சிங் கொடுத்த காசோலை போலியானது என்பது தெரியவந்ததையடுத்து, ரிஷப் பண்ட்டும் அவரது மேலாளரும் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rishabh pant