கார் விபத்தில் சிக்கி கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்துள்ளார். அவரது நிலைமை தற்போது எப்படி உள்ளது என்பது குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருப்பவர் ரிஷப் பந்த். தனது அதிரடி ஆட்டத்தால் உலகம் முழுவதும் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்களை இவர் பெற்றிருக்கிறார். இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திர வீரராக ரிஷப் பந்த் பார்க்கப்படுகிறார். இந்த நிலையில் இன்று அவர் சென்ற கார் உத்தரகண்டில் விபத்துக்குள்ளாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் படுகாயமடைந்த ரிஷப் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக வெளிவந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ஏராளமானோர் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான ஹேஷ் டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. கிரிக்கெட் நட்சத்திரங்கள் பெரும்பாலானோர் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விபத்து குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக தற்போது வெளிவந்துள்ளன. அதாவது உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கி என்ற இடத்திற்கு தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக ரிஷப் பந்த் டெல்லியிலிருந்து சென்றிருக்கிறார்.
ரூர்க்கி அருகே இன்று அதிகாலை 5.30 மணியளவில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. சாலையில் நடுப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் டிவைடரில் ரிஷப் பந்த் ஓட்டிவந்த மெர்சிடஸ் கார் மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இதையடுத்து, கார் கண்ணாடியை உடைத்து வெளியேற ரிஷப் பந்த் முயற்சித்துள்ளார். அப்போது அவருக்கு கை, கால், முதுகு, தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசாரால் கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், உயர் சிகிச்சைக்காக டேராடூனிற்கு ரிஷப் பந்த் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் காமி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, ரிஷப் பந்த்திற்கு தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார் - வீரர்கள், தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி
தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. இதில் ரிஷப் பந்த் இடம்பெற்றிருந்தார்.
ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்…
இருப்பினும் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளதால், அதற்கு தயாராக ரிஷப் பந்த்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் மோசமான விபத்தை ரிஷப் எதிர் கொண்டிருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rishabh pant