விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் தொடரையடுத்து இந்திய அணி தற்போது இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இலங்கை அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இதில் 20 ஓவர் தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டன் பொறுப்பு சூர்ய குமார் யாதவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மூத்த வீரர்கள் விராட் கோலி, கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றனர். ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணைக் கேப்டனாக கே.எல். ராகுலும் நீடிக்கின்றனர். இலங்கை தொடருக்கு பின்னர், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளிலும் அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி விளையாடுகிறது.
இந்நிலையில் கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பந்த் இந்த தொடர்களில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மே மாதம் அல்லது ஏப்ரல் இறுதியில தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரிஷப் பந்த் இடம்பெறுவாரா என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் இருந்து வருகிறார்.
தற்போது ரிஷப் பந்த்திற்கு நெற்றியில் சிறிய அளவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. மேலும், வலது கால் மூட்டில் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த சிகிச்சை முடிந்தால் மட்டுமே அவர் எத்தனை மாதங்களில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவார் என்பது உறுதி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிஷப் பந்த்திற்கு தற்போது டேராடூன் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்களை பிசிசிஐ தொடர்ந்து கவனித்து வருகிறது.
மகள் ஜிவாவுடன் புத்தாண்டை கொண்டாடிய தோனி… மனைவி சாக்ஷியின் வீடியோ வைரல்
இந்திய அணியில் விக்கெட் கீப்பர்கள் இடத்திற்கு இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற தகுதி வாய்ந்த இளம் வீரர்கள் உள்ளனர். இருப்பினும் தனது அசாத்திய திறமையால் மற்றவர்களை விடவும் ரிஷப் பந்த் பல படிகள் முன்னிலையில் இருக்கிறார்.
இதற்கிடையே உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான உத்தேச இந்திய அணியின் 20 வீரர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Rishabh pant