Home /News /sports /

தோனியை விட ரிஷப் பண்ட் பெரிய கிரிக்கெட் வீரர் - முன்னாள் வீரர் கருத்து

தோனியை விட ரிஷப் பண்ட் பெரிய கிரிக்கெட் வீரர் - முன்னாள் வீரர் கருத்து

தோனி, ரிஷப் பண்ட்

தோனி, ரிஷப் பண்ட்

உண்மையில் தோனிக்கும், ரிஷப் பண்ட்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.  ரிஷப் பண்ட்டின் ஆக்ரோஷத்தை ஒப்பிடும் போது தோனி கொஞ்சம் குறைவுதான். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்ச்களை விட்ட விக்கெட் கீப்பர் தோனி என்று சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது 66 கேட்ச்களை தோனி ட்ராப் செய்ததாக ஆன்லைன் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 90 டெஸ்ட்களிலேயே தோனி காலாவதியாகி ஓய்வு அறிவித்து விட்டார். அதில் 6 சதங்களை மட்டுமே எடுத்துள்ளார். சராசரி மிகவும் குறைவான 38 ரன்கள்தான்.

மேலும் படிக்கவும் ...

    மாறாக ரிஷப் பண்ட்30 டெஸ்ட் போட்டிகளிலேயே 4 சதங்கள், 9 அரைசதங்கள் எடுத்துள்ளார், அதுவும் ரிஷப் பண்ட் எடுத்த சிட்னி சதம், இங்கிலாந்தில் எடுத்த சதம், சமீபமாக மிக மிக கடினமான பிட்சில் அதைவிடவும் கடினமான தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எடுத்த சதம் தோனியினால் டெஸ்ட் போட்டிகளில் நினைத்துக் கூட பார்க்க முடியாததாகும். ரிஷப் பண்ட் சராசரி 40.85. ஸ்ட்ரைக் ரேட் 70.45. தோனி ஸ்ட்ரைக் ரேட் 59.11 தான். 90 போட்டிகளில் தோனி 78 சிக்சர்களை மட்டுமே அடிக்க ரிஷப் பண்ட் இப்போதே 44 சிக்சர்களை விளாசியுள்ளார்.

    ஒருமுறை மே.இ.தீவுகளுக்கு எதிராக கடைசி 14 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலையில் போட்டி ட்ரா ஆக விட்டவர் தோனி, மாறாக ரிஷப் பண்ட் சிட்னியில் ஆஸ்திரேலியாவின் 406 ரன் இலக்கை ஏறக்குறைய விரட்டியிருப்பார், பிரிஸ்பனில் 329 ரன்கள் இலக்கை அனாயசமாக விரட்டி முடித்தார் பண்ட். எனவே பலவிதங்களில் தோனியை அவர் இப்போதே கடந்து விட்டார், எனவே அவரைப் போய் தோனியின் சிஷ்யன், தோனியைப் பார்த்து வளர்ந்தவர் என்று இந்தி, ஆங்கில ஊடகங்கள் தோனியின் நிழலாக பண்ட்டை சித்தரிப்பது ஏன் என்பது புரியாத புதிரே.

    இந்நிலையில் முன்னாள் இந்திய வீரரும் ரஞ்சி டிராபி முன்னாள் மும்பை நட்சத்திரமுமான வாசிம் ஜாஃபர் தோனியை ரிஷப் பண்ட் நிச்சயம் தூக்கிச் சாப்பிட்டு விடுவார் என்று கூறியுள்ளார்:

    “ஆம், அவர் நிச்சயமாக தோனியை விட சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்டராக மாற முடியும். இவ்வளவு இளம் வயதில், அவர் ஏற்கனவே மிகவும் நம்பமுடியாத சில நாக்கை விளையாடியுள்ளார், எனவே வரும் 8-10 ஆண்டுகளில், அவர் மிகவும் முதிர்ச்சியடைந்தவராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன், மேலும் அதிக அனுபவத்துடன் அவர் நிச்சயமாக தோனியை விட சிறந்தவராக இருக்க முடியும்” என்று ஜாஃபர் ESPNCricinfo வினா விடை அமர்வில் கூறினார்.

    சமீபத்தில் இலங்கைக்கு எதிராக கபில்தேவ் வைத்திருந்த அதிரடி அதிவேக அரைசத சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட். 40 ஆண்டுகள் கபில் வைத்திருந்த சாதனை, நடுவில் அதிரடி மன்னன், என்று விதந்தோதப்பட்ட தோனியினால் கபில் தேவின் 30 பந்து அரைசத சாதனையை முறியடிக்க முடியவில்லை, ரிஷப் பண்ட் தான் முறியடித்தார். 28 பந்துகளில் அரைசதம் கண்டு புதிய இந்திய டெஸ்ட் சாதனையை நிகழ்த்தினார் ரிஷப் பண்ட்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: MS Dhoni, Rishabh pant

    அடுத்த செய்தி