பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 183 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆடிவருகிறது. இன்று இன்னமும் 37 ஓவர்கள் மீதமுள்ளன, இந்திய அணிக்கு வெற்றி பெற 145 ரன்கள் தேவை.
ரஹானே 22 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸ் என ஆக்ரோஷமாக ஆடிவந்த நிலையில் கமின்ஸ் அவரது நெஞ்சுக்கு வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை விக்கெட் கீப்பர் தலைக்குமேல் அடிக்கலாம் என ஆடி பெய்ன் கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், தேவையில்லாத ஷாட், கமின்ஸின் 2வது விக்கெட்டாகும் இது.
ரிஷப் பந்த் இறங்கி 10 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார் புஜாரா 6 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.
ரஹானே நேதன் லயன் பந்தை மேலேறி வந்து ஆன் திசையில் மிகப்பெரிய சிக்சரை அடித்து உடனேயே ஆட்டமிழந்தது துரதிர்ஷ்டமே.
பந்த் இறங்கி 2 ரன்களை எடுத்த போது 1,000 டெஸ்ட் ரன்களை அதிவேகமாக எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். தோனிக்கு 1,000 டெஸ்ட் ரன்களுக்கு 32 இன்னிங்ஸ்கள் தேவைப்பட ரிஷப் பந்த் 27 இன்னிங்ஸ்களில் சாதித்துள்ளார்.
பரூக் இஞ்சினியர் (36, இன்னிங்ஸ்), கிரண் மோரே (50), சஹா (37), நயன் மோங்கியா (39), சையத் கிர்மானி (45) ஆகிய விக்கெட் கீப்பர்கள் இந்திய அணியில் 1000 ரன்களை எடுத்துள்ளனர்.
ஆனால் 21 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை அதிவேகமாக எடுத்த குவிண்டன் டி காக் இன்னமும் முதலிடத்தில் இருக்கிறார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.