மைதானத்தில் காதலை சொல்லிய ரசிகை! திகைத்து போன ரிஷப் பந்த் - வீடியோ

மைதானத்தில் காதலை சொல்லிய ரசிகை! திகைத்து போன ரிஷப் பந்த் - வீடியோ
ரிஷப் பந்த்
  • News18 Tamil
  • Last Updated: September 24, 2019, 9:08 PM IST
  • Share this:
கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியின் போது ரசிகர்களை சந்தித்த ரிஷப் பந்திடம் பெண் ஒருவர் காதலை வெளிப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் சமனில் முடிந்தது. கடைசி டி20 பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கு முன் இந்திய அணியினர் சின்னசாமி மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு இருந்தனர். அப்போது ரிஷப் பந்த் ரசிகர்களை சந்தித்து ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார். அப்போது ஒரு ரசிகை லவ் யூ ரிஷப் என்றார். இதை சற்றும் எதிர்பாராத ரிஷப் திகைப்பில் ஏதும் பேசாமல் இருந்தார்.
6 வினாடிகள் மட்டுமே இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 25 வயது இளம் வீரர் ரிஷப் பந்த் இந்திய அணியின் முக்கிய வீரராக வலம் வருகிறார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரும் 2ம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் தொடங்க உள்ளது.

Also Watch : துணை முதலமைச்சர் வீட்டு வாசலில் ₹1 கோடி பணம் மோசடி...

First published: September 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்