தோனியின் நீண்ட நாள் சாதனையை முறியடித்த இளம் வீரர் ரிஷப் பந்த்!

தோனியின் நீண்ட நாள் சாதனையை முறியடித்த இளம் வீரர் ரிஷப் பந்த்!
தோனி - பந்த் (கோப்பு படம்)
  • Share this:
டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் நீண்ட நாள் சாதனையை இளம் வீரர் ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றதான் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். தோனி தலைமையில் இந்திய அணி 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலி தலைமையில் இந்திய அணி 48 டெஸ்ட்போட்டிகளில் விளையாடி 28 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.


மகேந்திர சிங் தோனியின் மற்றொரு சாதனையும் இந்த டெஸ்ட் போட்டியில் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் அதிவேகமாக 50 பேரை வெளியேற்றிய இந்திய விக்கெட் கீப்பராக தோனி இருந்தார். அந்த சாதனையை தற்போது ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பிராத்வெய்ட்டின் கேட்சை பிடித்து அவரை வெளியேற்றினார். இது அவருடைய 50வது டிஸ்மிஸ் ஆகும். தோனி 15 டெஸ்ட் போட்டிகளில் 50 டிஸ்மிஸ் செய்திருந்தார். ரிஷப் பந்த் 11 டெஸ்ட் போட்டியில் 50 டிஸ்மிஸ் செய்து சாதனை படைத்துள்ளார்.

குறைந்த டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 50 பேரை வெளியேற்ற விக்கெட் கீப்பர்கள்மார்க் பவுச்சர் - 10 டெஸ்ட்
ஜானி பேரிஸ்டோவ் - 10 டெஸ்ட்
டிம் பெயின் - 10 டெஸ்ட்
ஆடம் கில்கிறிஸ்ட் - 10 டெஸ்ட்
ரிஷப் பந்த் - 11 டெஸ்ட்

 

 
First published: September 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading