#WorldCup2019: இந்திய அணியில் இடம்பிடிக்க போட்டிபோடும் வீரர்கள்!

#WorldCup2019 in May later this year | வரும் மே மாதம் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது.

news18
Updated: February 11, 2019, 6:01 PM IST
#WorldCup2019: இந்திய அணியில் இடம்பிடிக்க போட்டிபோடும் வீரர்கள்!
விஜய் சங்கர், ரஹானே. ரிஷப் பண்ட்.
news18
Updated: February 11, 2019, 6:01 PM IST
2019 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வீரர்களிடையே கடும்போட்டி நிலவுவதாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியுள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 2 விதமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்தது.

அண்மையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, அந்நாட்டு மண்ணிலும் முதல் முறையாக ஒரு நாள் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்திய அணியைப் பொறுத்தவரை, ஒரு நாள் தொடரில் வலிமையான அணியாக உள்ளது.

Indian Team, இந்திய கிரிக்கெட் அணி
நியூசிலாந்தில் ஒரு நாள் தொடருக்கான கோப்பை உடன் இந்திய அணி. (BCCI)


வரும் மே மாதம் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்க இருப்பதால், இந்திய அணியில் இடம் பிடிக்க பல திறமையான வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதனால், தேர்வுக்குழுவினர் யாரை விடுவது யாரை தேர்வு செய்வதென தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். விராட் கோலி தலைமையிலான அணியில் விக்கெட் கீப்பர் தோனி இருப்பார்.

அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் ஒரு நாள் போட்டிகளில் நல்ல பார்மில் உள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான டி-20 ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக விளையாடியுள்ளனர். தோனி இடம்பெற்றால் தினேஷ் கார்த்திக் பேட்ஸ்மேனாக மட்டுமே இறங்க முடியும்.

Indian Team, இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)


டி-20 போட்டிகளில் கோலியின் இடத்தில் களமிறங்கி ரிஷப் பண்ட் அசுர பார்மில் இருக்கிறார். இதுதவிர மூத்த வீரர் ரஹானேவும் உள்ளார். இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், 15 பேர் கொண்ட அணியில் இடம்பிடிப்பதற்கு ரஹானே, ரிஷப் பண்ட், விஜய் சங்கர் ஆகியோரிடையே கடும் போட்டி இருப்பதாக கூறியுள்ளார்.

Video: காலில் விழுந்த ரசிகர்... தேசியக் கொடியை தாங்கிப்பிடித்த தோனி..!

Also Watch..

First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...