ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘ரிஷப் பண்ட் குண்டாக இருக்கிறார்’ – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கருத்து

‘ரிஷப் பண்ட் குண்டாக இருக்கிறார்’ – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கருத்து

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

புதுவிதமான ஷாட்களை அடிக்க பண்ட் முயற்சி செய்கிறார். ஆனால் அவுட்டாகி விடுகிறார் – சல்மான் பட்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் குண்டாக இருக்கிறார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் கூறியுள்ளார். பண்ட் ஃபிட்டாக இருந்தால் இன்னும் சிறப்பாக விளையாடுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நெருக்கடியான நேரத்தில் களத்தில் இறங்கினாலும், தனது இயல்பான அதிரடி ஆட்டத்தால் எதிரணியை ரிஷப் பண்ட் தொடர்ந்து கலங்கடித்து வருகிறார். இந்திய அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகவும் பண்ட் இருக்கிறார்.

தற்போது வங்கதேசத்திற்கு எதிராகநடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 45 பந்துகளை சந்தித்த பண்ட் அதிரடியாக 46 ரன்களை சேர்த்தார். இதில் 2 சிக்ஸரும் 6 பவுண்டரிகளும் அடங்கும்.

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் சுப்மன் கில் அதிரடி சதம்… வலுவான நிலையில் இந்திய அணி

இந்நிலையில் பண்ட்டின் பேட்டிங் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

எந்த நேரத்திலும் தனது இயல்பான ஆட்டத்தை ரிஷப் பண்ட் வெளிப்படுத்தி வருகிறார். புதுவிதமான ஷாட்களை அடிக்க பண்ட் முயற்சி செய்கிறார். ஆனால் அவுட்டாகி விடுகிறார். நான் எப்போதும் ரிஷப் பண்ட்டின் ஃபிட்னஸ் குறித்து பேசி வருகிறேன்.

புதுவிதமான ஷாட்களை அடிக்க வேண்டும் என்றால் அதற்கு வீரர்கள் ஃபிட்டாக இருக்க வேண்டும். பண்ட் ஃபிட்டாக இருந்தால் அவரால் எந்தமாதிரியான ஷாட்களையும் எளிதாக அடிக்க முடியும். நிச்சயமாக அவர் குண்டாக இருக்கிறார். அவரது வயதிற்கு ஏற்ற ஃபிட்னஸ் அவரிடம் இல்லை. உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் பண்ட் கவனம் செலுத்த வேண்டும்.

போர்ச்சுக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ ராஜினாமா… உலகக்கோப்பை தோல்வியை தொடர்ந்து முடிவு

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 404 ரன்களை எடுத்துள்ளது. இதன்பின்னர் பேட் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களை எடுத்திருக்கிறது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 254 ரன்களை இந்திய அணி பெற்றுள்ளது.

First published:

Tags: Rishabh pant