Home /News /sports /

Rishab Pant | ரிஷப் பந்த் அடிக்க ஆரம்பித்தால் நிறுத்துவது கடினம்: நியூசிலாந்து பவுலர்களுக்கு பயிற்சியாளர் எச்சரிக்கை

Rishab Pant | ரிஷப் பந்த் அடிக்க ஆரம்பித்தால் நிறுத்துவது கடினம்: நியூசிலாந்து பவுலர்களுக்கு பயிற்சியாளர் எச்சரிக்கை

ஜாக் லீச்சை சிக்ஸ் விளாசிய ரிஷப் பந்த்.

ஜாக் லீச்சை சிக்ஸ் விளாசிய ரிஷப் பந்த்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-அதிரடி மன்னன் ரிஷப் பந்த் மிக மிக ஆபத்தான ஒரு வீரர் என்று நியூசிலாந்து பந்து வீச்சு பயிற்சியாளர் ஷேன் ஜர்கன்சென் எச்சரித்துள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி மோதுகிறது. இதில் ரிஷப் பந்த் இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியா தொடரில் சிட்னி மற்றும் பிரிஸ்பனில் அவர் ஆடிய ஆட்டத்தினால் உலகம் மிரண்டு போயுள்ளது.

    20 டெஸ்ட்டுக்குள்ளாகவே டெஸ்ட் போட்டியின் போக்கை மாற்றி இந்திய அணியை தனி நபராக வெற்றி பெறச் செய்யும் ஒரு அதிரடி திருப்பு முனை வீரராக ரிஷப் பந்த் திகழ்கிறார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் தாக்குதல் பாணி ஆட்டம் ஆடி எதிரணியினரை கதிகலங்கச் செய்து வருகிறார். ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரை அசால்ட்டாக ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுகிறார் ரிஷப் பந்த். ஜோப்ரா ஆர்ச்சரையும் தன் ரிவர்ஸ் ஸ்வீப்புக்கு விட்டு வைக்கவில்லை.

    இந்நிலையில் நியூசிலாந்து பவுலிங் பயிற்சியாளர் ஜர்கன்சென் கூறும்போது, “ரிஷப் பந்த் மிக மிக அபாயகரமான வீரர், ஆட்டத்தின் தலைவிதியையே மாற்றக்கூடியவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் இப்படி ஆடியதைப் பார்த்தோம். இங்கிலாந்துக்கு எதிராகவும் தனிவீரராக ஆட்டத்தை மாற்றினார்.

    அவர் மிக மிக பாசிட்டிவ் மனநிலையில் ஆடக்கூடியவர், அதனாலேயே அவரை வீழ்த்துவதற்கான வாய்ப்பும் உள்ளது என்கிறேன். நம் பவுலர்கள் அவருக்கு கடினமாக வீச வேண்டும், அவர் எளிதில் ரன்களை விளாச அனுமதிக்கக் கூடாது.

    நிச்சயமாக அவர் ஒரு சுதந்திர ஜீவி, அடிக்க ஆரம்பித்தால் நிறுத்துவது கடினம். இதை மனதில் நிறுத்திக் கொள்வது அவசியம்.

    அதே போல் இந்தியாவின் பந்து வீச்சும் மிகச் சவாலானதே. பந்து வீச்சில் அவர்களுக்கு நிறைய சாய்ஸ் உள்ளது. பும்ரா முதல் ஷர்துல் வரை நமக்கு சரியான சவால் காத்திருக்கிறது. ஷர்துல் ஆல்ரவுண்டர், இவரும் ஆஸ்திரேலியாவில் பிரமாதமாக ஆடினார். முகமது சிராஜ் இருக்கிறார், ஸ்பின்னர்கள் இருப்பக்கமும் ஸ்பின் செய்வார்கள்.

    வல்லமை மிக்க, தனித்துவமான டெஸ்ட் பவுலர்களை இந்திய அணி கொண்டுள்ளது. ” என்றார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: ICC World Test Championship, Rishabh pant

    அடுத்த செய்தி