Home /News /sports /

எத்தனை பேர் அவுட் ஆனாலும் எங்களை அடக்க முடியாது.. அடிதடியாட்டம்தான்: ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியாவின் ‘அல்ட்ரா மாடர்ன்’ பவர் ஹிட்டிங்

எத்தனை பேர் அவுட் ஆனாலும் எங்களை அடக்க முடியாது.. அடிதடியாட்டம்தான்: ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியாவின் ‘அல்ட்ரா மாடர்ன்’ பவர் ஹிட்டிங்

ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி வீரர்கள் கோப்பையுடன்.

ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி வீரர்கள் கோப்பையுடன்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் த்ரில் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முக்கியக் காரணம் ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் ‘அடிப்பதைத் தவிர வேறொன்றுமறியேன் பராபரமே’ என்று ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆடியதும், அன் ஆர்த்தடாக்ஸ் பேட்டிங்குக்கு எதிராக புவனேஷ்வர் குமாரின் கிளாசிக் ஸ்விங் பவுலிங்கும் நேற்று இந்திய தொடர் வெற்றியைத் தீர்மானித்தது.

மேலும் படிக்கவும் ...
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் த்ரில் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முக்கியக் காரணம் ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் ‘அடிப்பதைத் தவிர வேறொன்றுமறியேன் பராபரமே’ என்று ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆடியதும், அன் ஆர்த்தடாக்ஸ் பேட்டிங்குக்கு எதிராக புவனேஷ்வர் குமாரின் கிளாசிக் ஸ்விங் பவுலிங்கும் நேற்று இந்திய தொடர் வெற்றியைத் தீர்மானித்தது.

ரோகித் சர்மா (37), ஷிகர் தவான் (67) 10 ஓவர்களில் 65 ரன்களைச் சேர்த்தனர். இது 2011 உலகக்கோப்பைக்குப் பிறகு முதலில் பேட்டிங் செய்து விரைவாக எடுத்த ரன்களாகும். 10 ஆண்டுகளாக இந்திய அணியின் தொடக்கம் இதை விட மந்தமாக இருந்தது என்றுதான் இதற்குப் பொருள். ஆனால் அடுத்த 5 ஓவர்களில் அதிரடி காட்டி மேலும் 38 ரன்களைச் சேர்த்து 14.4 ஓவர்களில் ரோகித், தவான் ஜோடி ஸ்கோரை 103/1 என்று கொண்டு வந்தனர்.

ரிஷப் பந்த்தின் ஒரு கை சிக்ஸ்.


ஆனால் அதன் பிறகு இருவரும் ஆட்டமிழக்க, விராட் கோலி மொயின் அலியின் பெரிய ஸ்பின்னுக்கு ஸ்டம்புகளை இழக்க, ராகுலும் (7) ஆட்டமிழக்க இந்தியா 24.2 ஓவர்களில் 154/7 என்று சரியும் அபாயத்தில் இருந்தது. அப்போது பாண்டியா, ரிஷப் பந்த் இணைந்தனர். உலகின் மிக அபாயகரமான ஜோடி இது. ஆனால் பட்லரும் நிறைய தவறு செய்தார், இருவரும் ஸ்பின்னை மைதானத்துக்கு வெளியே அடிப்பவர்கள் என்று தெரிந்தும் இருவரில் ஒருவரையாவது காலி செய்ய எந்த ஒரு தீவிரமும் பட்லரும் காட்டவில்லை, ஸ்பின்னர்கள் ரஷீத், லிவிங்ஸ்டன், மொயீன் அலி ஆகியோரும் காட்டவில்லை.

157/4 என்ற ஸ்கோர் 36வது ஓவரில் 256 என்று படபடவென உயர்ந்தது, காரணம் ரிஷப் பந்த், பாண்டியாவின் அல்ட்ரா மாடர்ன் பவர் ஹிட்டிங்தான். விக்கெட்டுகள் விழுந்தால் எங்களுக்கென்ன எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் அடிதான், எங்கு வேண்டுமானாலும் போடு என்ற அணுகுமுறையை எதிர்த்து இங்கிலாந்து.

ஒரு முறை 3 விக்கெட்டுகள் சடுதியில் சரிந்தாலும் ஒரு ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சனத் ஜெயசூரியா ஆடினாரே அந்த ஆட்டம் போன்றது இது. பந்த் அசால்ட்டாக 25 பந்துகளில் 31 ரன்களுக்கு வந்தார். பகுதி நேர ஸ்பின்னரைக் கொண்டு போய் டைனமைட் ரிஷப் பந்த்துக்கு எதிராக கொடுக்கலாமா? லிவிங்ஸ்டனை ‘இனிமே போடுவே நீ’ என்று கேட்காத குறைதான் அட்டாக்கிலிருந்தே தூக்க வைத்தார் பந்த். இன்னொரு புறம் மொயீன் அலியை நான் பார்த்துக் கொள் (ல்) கிறேன் என்று பாண்டியா ஆட சிக்சர் மழை பொழியத் தொடங்கியது. 11.4 ஓவர்களில் 99 ரன்களைக் குவித்தனர், இங்கிலாந்துக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.ஒருமுறை ஜெர்மனிக்கு எதிரான ஹாக்கி போட்டியில் ஜெர்மனி 5-1 என்று முன்னிலை வகிக்க, கடைசி நிமிடங்களில் இந்தியாவின் மொஹீந்தர்பால் சிங் 4 கோல்களை அடிக்க என்ன நடந்ததென்றே ஜெர்மனிக்குத் தெரியவில்லை. அதே போல் பிரேசிலில் நடந்த கால்பந்து உலகக்கோப்பையில் ஒரு 5 நிமிட வெறியாட்டத்தில் ஜெர்மனி கோல்களாகத் திணிக்க பிரேசில் சரணடைந்தது. இது போன்றுதான் நேற்றும் ரிஷப் பந்த், பாண்டியா காட்டடியும். நின்னு ஆடி தொசுக்கு தொசுக்குன்னு கொண்டு போய் கடைசியில் 305 ரன்கள் என்று முடித்து தோல்வி அடைவதைவிட. 156/4லிருந்து அடுத்த 10 ஓவரில் 100. ஸ்கோர் 325, முடிந்தால் 350 என்று போவதே சிறந்தது என்ற அணுகுமுறை.

இவர்கள் இருக்கும் வரை டாப் ஆர்டரும் இதே போன்று ஆக்ரோஷமாக ஆடினால் இந்திய அணி ஒருநாள்போட்டிகளில் 300 போல் 400 ரன்களையும் அடிக்கடி தொடும் நிலைக்கு உயரும். அதனால் அல்ட்ரா மாடர்ன் அதிரடி வீரர்களான ஷுப்மன் கில், பிரிதிவி ஷா ஆகியோரையும் அணிக்குள் விரைவில் கொண்டு வர வேண்டும், ஷிகர் தவானை உட்கார வைக்க வேண்டும்.

ஆனால் இத்தகைய அல்ட்ரா மாடர்ன் பவர் ஹிட்டிங்கை 2015 உலகக்கோப்பைத் தோல்விக்குப் பிறகு கொண்டு வந்ததே இங்கிலாந்துதான், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், பட்லர், மோர்கன், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் என்று அங்கு அடிதடி உண்டு. ஆனால் காலை நகர்த்தாமல் பவர் மட்டையை கொண்டு வந்து சுழற்றும் வீரர்கள் மத்தியில் புவனேஷ்வர் குமார் போன்ற கிளாசிக் ஸ்விங் பவுலர்கள் சக்சஸ் ரேட் அதிகம் இருக்கவே செய்யும். அதன் உதாரணம் நேற்று புவனேஷ்வர் வீசிய அருமையான ஸ்விங் பந்துகள்.ஜேசன் ராய்க்கு காற்றில் ஆடிக்கொண்டே வந்த புவனேஷ்வர் குமார் பந்து பிட்ச் ஆகி லேட் இன்ஸ்விங் ஆக காலை நகர்த்தாமல் ஆடாமல் விட்ட ஜேசன் ராய் பவுல்டு ஆனார். அதாவது ஒரு மரபான பேட்ஸ்மென் அந்தப் பந்தை காலைப் போட்டு தடுத்தாடியிருப்பார். இப்படிப்பட்ட அல்ட்ரா மாடர்ன் பேட்ஸ்மென்களிடம் உள்ள பிரச்னை இதுதான், எனவே இந்தக் காலக்கட்ட டி20, ஒருநாள் போட்டிகளில் அதிரடி பேட்டிங்குக்கு எதிராக மரபான ஸ்விங் பவுலிங்கே எடுபடும். காட்டுவேக பவுலர் வீசினால் அதே காட்டுவேகத்துக்கு சிக்சர்தான் போகும். பேர்ஸ்டோவையும் அப்படித்தான் எல்.பி.செய்தார்.

ஆகவே ரிஷப் பந்த், பாண்டியாவின் விக்கெட்டுகள் விழுந்தாலும் எங்களை நிறுத்த முடியாது என்ற ரகத்திலான பவர் ஹிட்டிங்கும், புவனேஷ்வர் குமாரின் கிளாசிக் மரபான ஸ்விங் பவுலிங்கும்தான் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது.

மரபும் நவீனமும் இணைந்த ஒரு அருமையான மேட்ச் ஆகும் நேற்று. இங்கிலாந்தும் விக்கெட்டுகள் விழுந்தாலும் அடி என்றுதான் ஆடியது, 49வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசிய போது சாம் கரன் அவரை அடித்து நொறுக்கியிருக்க வேண்டும், அவர் என்ன ஷோயப் அக்தரா? வாசிம் அக்ரமா? ஒரு நேர் நேர் தேமா பவுலர்., அனாவசியமாக அவர் ஓவரை விரயம் செய்தார். இதனால் யார்க்கர் நடராஜன் ஓவரை அடித்தால்தான் வெற்றி என்ற நிர்பந்தத்துக்கு சாம் கரன் தள்ளப்பட, நடராஜன் பந்துகளை அடிப்பது சற்று கடினமே. அதை நடராஜன் அற்புதமாகச் செய்து முடித்து பிரஷர் கடைசி ஓவர் பினிஷர் ஆனார்.

ஆட்ட நாயகன் சாம் கரன், தொடர் நாயகன் ஜானி பேர்ஸ்டோ, இரண்டுமே இங்கிலாந்துக்குச் சென்று விட்டது. மரபும் நவீனமும் இணைந்த ஒரு அரிய ஒருநாள் போட்டிதான் நேற்று நடைபெற்ற போட்டியாகும்.
Published by:Muthukumar
First published:

Tags: Captain Virat Kohli, Hardik Pandya, India Vs England, Rishabh pant

அடுத்த செய்தி