அசாத்திய தைரியன் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார்: புதுப் பந்தை எடுப்பதற்குள் அதிரடி; வெற்றி பெற 145 ரன்கள் தேவை

அசாத்திய தைரியன் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார்: புதுப் பந்தை எடுப்பதற்குள் அதிரடி; வெற்றி பெற 145 ரன்கள் தேவை

ரிஷப் பந்த் சிக்சர்.

சிட்னி டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. இந்திய அணி 407 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிவருகிறது. ரிஷப் பந்த் சற்று முன் 118 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து நேதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார்.

 • Share this:

  இந்திய அணி தற்போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்துள்ளது, புஜாரா 70 ரன்களுடனும் விஹாரி ரன் எடுக்காமலும் ஆடி வருகின்றனர்.

  உணவு இடவேளையின் போது புதிய பந்து எடுக்க 10 ஓவர்கள் மீதமிருந்தன. கொஞ்சம் நிதானமாகத் தொடங்கிய பிறகு கிரீன் பந்து வீச வந்தார், ரிஷப் பந்த் ரிஸ்க் எடுத்து இவரை 2 பவுண்டரிகள் விளாசினார். பிறகு நேதன் லயனை அடுத்த ஓவரில் மேலும் 2 பவுண்டரிகள் விளாசினார்.

  கடைசியில் நேதன் லயன் பந்தை இறங்கி வந்து மேலும் தூக்கி அடிக்க முயன்று பாயிண்டில் கேட்ச் ஆகி ஏமாற்றத்துடன் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்காக பந்த், புஜாரா ஜோடி 148 ரன்களைச் சேர்த்தது.

  கோலி இருந்திருந்தால் நிச்சயம் ஆஸ்திரேலியா இன்னும் பீதியடைந்திருக்கும்.

  நேதன் லயன் கைகொட்டி மகிழ்ந்தார், ஆனால் அவரை புரட்டி எடுத்தார் ரிஷப் பந்த் என்பதுதான் உண்மை, லயன் 30 ஓவர்களில் 91 ரன்கள் விளாசப்பட்டார்.

  புஜாரா கமின்ஸை சற்று முன் 3 பவுண்டரிகளை தொடர்ச்சியாக அடித்தார். 6,000 டெஸ்ட் ரன்களை எடுத்த 11வது இந்திய வீரர் ஆனார் புஜாரா. இது சரியான சமயத்தில் வந்த 6000 ரன்களாகும்.

  இமாலய இலக்கை நோக்கி ஆடப்படும் மிகப்பெரிய இன்னிங்சை ரிஷப் பந்த் ஆடி முடிக்க, புஜாரா ஆடி வருகிறார். விஹாரி 13 பந்துகள் ஆடி இன்னமும் ரன் எடுக்கவில்லை.

  சரியாக 80வது ஓவரில் லயனிடம் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தவுடன் புதிய பந்தை ஆஸ்திரேலியர்கள் எடுத்தனர்.
  Published by:Muthukumar
  First published: