“சார் ஒரு ஃபோட்டோ“ உற்சாகமாக வந்த ரிக்கி பாண்டிங்-க்கு ரசிகரால் நேர்ந்த சங்கடம்

“சார் ஒரு ஃபோட்டோ“ உற்சாகமாக வந்த ரிக்கி பாண்டிங்-க்கு ரசிகரால் நேர்ந்த சங்கடம்
ரிக்கி பாண்டிங்
  • Share this:
'சார் ஒரு போட்டோ' என்றவுடன் வேகமாய் வந்த ரிக்கி பாண்டிங்கிடம் போனை கொடுத்து விட்டு பெண் தொகுப்பாளருடன் போஸ் கொடுத்துள்ளார் ரசிகர் ஒருவர்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பல சாதனைகளை படைத்துள்ளார். அப்படிப்பட்ட ஜாம்பவன் இருக்கும் இடத்தில் அவரை விட்டு பெண் தொகுப்பாளருடன் ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார், அதையும் ரிக்கி பாண்டிங்கை வைத்தே செய்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி குறித்து ரிக்கி பாண்டிங் மற்றும் விளையாட்டு போட்டிகளை சிறப்பாக தொகுத்து வழங்கும் மெக்லாப்லின் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர்.


அப்போது அங்கு வந்த ரசிகர் ஒருவர் பெண் தொகுப்பாளருடன் புகைப்படம் எடுக்க விரும்பி உள்ளார். தனது விருப்பத்தை ரிக்கி பாண்டிங்கிடம் அவர் தெரிவிக்க, அவரும் புகைப்படம் எடுத்துள்ளார்.இந்த புகைப்படத்தை மெக்லாப்லின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு பலர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதில் மெக்லாப்லின் இருக்கும் இடத்தில் ரிக்கி பாண்டிங் உடன் புகைப்படம் எடுக்க யார் விரும்புவார்கள் என்று கிண்டல் செய்துள்ளனர்.
First published: November 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading