ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய அணியை கலாய்த்த பாண்டிங் பல்டி; ரிஷப் பந்த் அதிரடியை வைத்து சேவாக் பதிலடி

இந்திய அணியை கலாய்த்த பாண்டிங் பல்டி; ரிஷப் பந்த் அதிரடியை வைத்து சேவாக் பதிலடி

சேவாக் தன் ட்விட்டர் பக்கத்தில் பாண்டிங்கை கலாய்த்து வெளியிட்ட புகைப்படம்.

சேவாக் தன் ட்விட்டர் பக்கத்தில் பாண்டிங்கை கலாய்த்து வெளியிட்ட புகைப்படம்.

ரிக்கி பாண்டிங் கருத்திற்கு சேவாக் சிம்பாலிக்காக ஒரு புகைப்படத்துடன் பதிலடி கொடுத்தார்.

 • 2 minute read
 • Last Updated :

  சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி வருகிறது, இன்னமும் 30 ஓவர்களை ஓட்டி விட்டால் அரும்பெரும் ட்ராவை சாதித்து விடலாம். ரிஷப் பந்த், புஜாரா ஆட்டமிழந்தவுடனேயே இந்திய அணி ட்ராவுக்கு ஆட ஆரம்பித்து விட்டனர்.

  குறிப்பாக ஹனுமா விஹாரி கால்தசைப் பிடிப்பு காயத்தினால் அவதியுற்று ரன் ஓட முடியாமல் சும்மா நின்று தடுத்தாடி வருகிறார். அஸ்வின் மட்டும்தான் ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷத்தை எதிர்கொண்டு சுவராக இப்போதைக்கு நின்று வருகிறார்.

  ஆனால் அன்று ஆஸ்திரேலியா 406 ரன்கள் இலக்கை நிர்ணயிப்பதற்கு முன்பாக சேனல் 7-ல் வர்ணனை செய்த ரிக்கி பாண்டிங் , “இப்போதே 310 ரன்கள் முன்னிலை நான் நேர்மையாகக் கூற வேண்டுமெனில் இந்தியா 2வது இன்னிங்சில் 200 ரன்களைத் தாண்டாது” என்றார்.

  ஆனால் காலையில் ரிஷப் பந்த், புஜாரா ஆடிய விதம் ஆஸ்திரேலிய அணியின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது.

  இருவரும் ஸ்கோரை 102/3 என்ற நிலையிலிருந்து விரைவு கதியில் 250 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். ரிக்கி பாண்டிங்கின் கருத்து பொய்த்துப் போனது. ஆனால் 97 ரன்களில் ரிஷப் பந்த் நேதன் லயனை உரித்தெடுக்க ஷாட் ஆடி அவுட் ஆனார்.

  புஜாரா 77 ரன்களில் ஹேசில்வுட் பந்தை தவறான லைனில் ஆடி பவுல்டு ஆனார். பின்னங்காலை கிராஸாக ஆஃப் ஸ்டம்ப் நோக்கி நகர்த்தியிருந்தால் அவர் பந்தை ஆடியிருப்பார். இதனையடுத்து இந்தியா அணி தற்போது காயங்களுடன், ஆஸி. அணியின் தாக்குதல் பந்து வீச்சை எதிர்த்து இன்னமும் 29 ஓவர்களைத் தாக்குப்பிடித்தால் நிறவெறிக்கும் ஆஸி.யின் ஆக்ரோஷத்துக்கும் கிடைத்த சரியான பதிலடியாக இருக்கும்.

  இந்நிலையில் ரிக்கி பாண்டிங் கருத்திற்கு சேவாக் சிம்பாலிக்காக ஒரு புகைப்படத்துடன் பதிலடி கொடுத்தார், அந்தப் புகைப்படத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் பாண்டிங் பின்னாலிலிருந்து ரிஷப் பந்த் எட்டிப்பார்ப்பது போல் இருக்கும். அந்தப் புகைப்படத்தை சேவாக் பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

  ஆனால் பாண்டிங்கே கூட பிற்பாடு தன் ட்விட்டர் பதிவில், “200 ரன்களுக்குள் இந்தியா முடிந்து விடும் என்று அதிகமாகவே எதிர்பார்ப்பு இருந்தது நான் எதிர்பார்த்தது போல் பிட்ச் உடையவில்லை. ரிஷப் பந்த் மிகச்சரியாக ஆடுகிறார். இந்தப் பிட்சில் இப்படித்தான் ஆட வேண்டும். இப்போது கேம் ஆன்” என்று தன் தவறான கருத்தை தானே மறுத்துள்ளார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: India vs Australia, Rishabh pant, Sydney, Virender sehwag