அடுத்த 3-4 ஆண்டுகளில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற சாதனை எண்ணிக்கையை கோலி எட்டிவிடுவார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டமன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
தற்போது 71 சர்வதேச சதங்களுடன் உள்ள விராட் கோலி, 100 சதங்கள் கண்ட சத சதநாயகன் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இன்னும் 3-4 ஆண்டுகளில் கோலி எட்டிவிடுவார் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சேர்த்து (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) அதிக சதம் அடித்தவர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். அவர் 782 இன்னிங்சில் 100 சதம் அடித்துள்ளார். 33 வயதான விராட் கோலி சமீபத்தில் 1200 நாட்களை தாண்டிய பிறகு தான் சர்வதேச போட்டியில் சதம் அடித்தார். ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்த சதத்தை அடித்தார்.
மேலும் படிக்க : புவனேஷ்வர் குமார் பவுலிங்கில் உண்மையான பிரச்சனை இதுதான்
சச்சின் டெண்டுல்கர் 2013-ம் ஆண்டிலும், பாண்டிங் 2012-ம் ஆண்டிலும் ஓய்வு பெற்று விட்டனர். இந்த நிலையில் விராட் கோலியால் 100 சதம் அடித்து டெண்டுல்கரின் சாதனையை தொட இயலும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
பாண்டிங் கூறும்போது, “இன்னும் 30 சதங்கள் தான் அவருக்கு தேவை. ஒரு ஆண்டுக்கு 5 அல்லது 6 சதம் அடிக்கும் திறன் கொண்டவர் விராட் கோலி. அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் அவரால் 100 சதங்களை எடுக்க இயலும்.” என்றுள்ளார்.
இது ரிக்கி பாண்டிங்கின் மாபெரும் கிரிக்கெட் கனவு மட்டுமல்ல, இந்திய ரசிகர்களின் மாபெரும் இந்தியக் கனவு என்பதோடு கோலியின் மாபெரும் சச்சின் சாதனைக் கனவுமாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Century, Indian cricket team, Sachin tendulkar, Virat Kohli