ஆஸ்திரேலிய அணியின் துணைப் பயிற்சியாளரானார் ரிக்கி பாண்டிங்!

2003, 2007-ம் ஆண்டுகளில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது. #RickyPonting

ஆஸ்திரேலிய அணியின் துணைப் பயிற்சியாளரானார் ரிக்கி பாண்டிங்!
ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். (Getty)
  • News18
  • Last Updated: February 8, 2019, 5:27 PM IST
  • Share this:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய துணைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை, உலகக்கோப்பையை வெல்லும் அளவுக்கு தயாரானதாக தெரியவில்லை.

Australia Won, ஆஸ்திரேலிய அணி வெற்றி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. (BCCI)இந்தியா உடனான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. இதனால், ஆஸ்திரேலிய அணியை வலுப்படுத்துவதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சில அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டேவிட் சாக்கர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

Ricky Ponting, ரிக்கி பாண்டிங்
உலகக்கோப்பையை கையில் ஏந்திய இருக்கும் ரிக்கி பாண்டிங். (ICC)


இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் புதிய துணைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் தொடர்ந்து நீடிக்கிறார். ஒரு காலத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி பேட்ஸ்மேனாக ரிக்கி பாண்டிங் வலம் வந்தார். 2003, 2007-ம் ஆண்டுகளில் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது.
Ricky Ponting, Justin Langer, ஜஸ்டின் லாங்கர், ரிக்கி பாண்டிங்
பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருடன் ரிக்கி பாண்டிங். (Getty)


உலகக் கோப்பை போட்டிகளின் வெற்றியின் நுணுக்கத்தை அறிந்தவர் பாண்டிங் என்பதால் துணைப் பயிற்சியாளராக பாண்டிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Video: சர்ச்சைக்குரிய வகையில் எல்.பி.டபுள்யூ அவுட்டான மிட்செல்!

Also Watch...

First published: February 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading