இந்திய அணிக்குத் தேர்வான முதல் மணிப்பூர் வீரர்!

#RexRajkumarSingh becomes first cricketer from Manipur in Indian Team | கூச் பெஹார் டிராபி போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டையும் வீழ்த்தி ரெக்ஸ் ராஜ்குமார் சாதனை படைத்திருந்தார்.

இந்திய அணிக்குத் தேர்வான முதல் மணிப்பூர் வீரர்!
ரெக்ஸ் ராஜ்குமார் சிங். (File)
  • News18
  • Last Updated: February 18, 2019, 6:29 PM IST
  • Share this:
இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் முறையாக மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் தேர்வாகி அசத்தியுள்ளார்.

அண்மையில் நடந்த மாநிலங்கள் அணிகள் மோதிய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கூச் பெஹார் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அனந்தபூரில் நடந்த போட்டியில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த அருணாச்சலப் பிரதேச அணி முதல் இன்னிங்சில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக, மணிப்பூர் அணியின் ரெக்ஸ் ராஜ்குமார், 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய மணிப்பூர் அணி, முதல் இன்னிங்சில் 122 ரன்களுக்கு சுருண்டது.


Rex Rajkumar Singh, ரெக்ஸ் ராஜ்குமார் சிங்
மைதானத்தில் பந்துவீசும் ரெக்ஸ் ராஜ்குமார் சிங். (File)


16 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய அருணாச்சலப் பிரதேச அணியை, ரெக்ஸ் தனது துல்லியமான பந்துவீச்சால் வெறும் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கினார். இவர் பந்துவீச்சில், 5 போல்ட், 2 எல்.பி.டபிள்யூ, 3 கேட்ச் என மொத்தம் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டையும் வீழ்த்திய அனில் கும்ப்ளேவின் சாதனையை ரெக்ஸ் ராஜ்குமார் சமன் செய்தார். அதன்பிறகு, விஜய் ஹசாரே, ரஞ்சி டிராபி உள்ளிட்ட போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடினார்.


இந்நிலையில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு ராஜ்குமார் தேர்வாகியுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் இருந்து இந்திய அணிக்கு தேர்வாகிய முதல் வீரர் இவர்தான். தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரெக்ஸ் ராஜ்குமார் விளையாடயுள்ளார்.

"பாகிஸ்தான் மறுமகளான சானியாவை நீக்குக" பா.ஜ.க எம்.எல்.ஏ கோரிக்கை!

Also Watch....

First published: February 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்