• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பிசிசிஐ பிரச்னைகளை விசாரிக்க முதல் முறையாக தனி விசாரணை அதிகாரி நியமனம்!

பிசிசிஐ பிரச்னைகளை விசாரிக்க முதல் முறையாக தனி விசாரணை அதிகாரி நியமனம்!

து தொடர்பாக அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்ரமணியத்திடம் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது.

து தொடர்பாக அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்ரமணியத்திடம் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது.

Retired judge DK Jain appointed as ombudsman of BCCI | பிசிசிஐ அமைப்பின் கணக்கு வழக்குகள் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் இந்த புதிய அதிகாரியே விசாரணை நடத்துவார் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையிலான பிரச்னைகள் குறித்து விசாரிக்க புதிய விசாரணை அதிகாரியாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து மோசமாக கருத்து தெரிவித்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    விசாரணை முடியும் வரை இருவரும் தொடர்ந்து விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அனுமதி அளித்தது. இதுபோன்ற பிரச்னைகளை விசாரணை நடத்த பிசிசிஐக்கு என தனி விசாரணை அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நிர்வாகக்குழு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    Former Judge DK Jain, ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே.ஜெயின்
    ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே.ஜெயின்.


    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, ஏ.எம்.சாப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (21.02.19) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிசிசிஐயின் விசாரணை அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே.ஜெயினை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    பிசிசிஐக்கு விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    மேலும், பிசிசிஐ அமைப்பின் கணக்கு வழக்குகள் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் இந்த புதிய அதிகாரியே விசாரணை நடத்துவார் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    VIDEO: தோனியைப் பார்த்துக் கதறி அழுத குழந்தை..!

    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: