அஹமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மொடீரா கிரிக்கெட் மைதானத்தை அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப், அவரது மனைவியுடன் இணைந்து இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிப்ரவரி 24, 25-ம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இரண்டு நாள்களும் குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக அஹமதபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கொடீரா கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்க உள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விட கொடீரா மைதானம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
Also Read : ட்ரம்ப் வருகை! குஜராத்தில் குடிசைப் பகுதியை மறைக்கும் வகையில் ஏழு அடி உயரத்துக்கு கட்டப்படும் சுவர்
இந்த மைதானம் சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு வசதிகளை கொண்டுள்ள இந்த மைதானத்தில் 3000 கார்கள் மற்றும் 10,000 இருசக்கர வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.