புஜாராவை டீமை விட்டு தூக்குங்க, பிரிதிவி ஷா-வைக் கொண்டு வாங்க: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் அதிரடி

புஜாரா

இந்தியாவின் தூண், புதிய சுவர் என்று பலராலும் விதந்தோதப்படும் செடேஷ்வர் புஜாரா பார்மில் இல்லை, தடவுகிறார், இவரை அணியிலிருந்து நீக்கி விட்டு இளம் ரத்தம், ஆக்ரோஷ வீரர் பிரிதிவி ஷாவை இந்திய டெஸ்ட் அணிக்குள் கொண்டு வாருங்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    புஜாரா பேட்டிங் காலியாகி வருகிறது, அடிக்க வேண்டிய பந்துகளைக் கூட அவரால் அடிக்க முடியவில்லை ஒன்று ஆடாமல் விடுகிறார் இல்லையேல் பவுண்டரி பந்துகளை எதிரணி பீல்டரிடம் அடிக்கிறார், தடுப்பாட்டம் என்பதற்காகவே தடுப்பாட்டம் என்ற கொள்கையை அவர் மாற்றவில்லை எனில் விரைவில் அவர் ஆடி வரும் ஒரே வடிவமான டெஸ்ட்டிலிருந்தும் ஓரங்கட்டப்படுவார்.

    கிட்டத்தட்ட இந்தக் கருத்துகளை பிரதிபலித்த முன்னாள் ஆஸ்திரேலியா ரிஸ்ட் ஸ்பின்னர் பிராட் ஹாக், “புஜாராவுக்குப் பதிலாக பிரிதிவி ஷா-வைக் கொண்டு வர வேண்டும். தொடக்க வீரராகவும் ஷா பொருந்திப் போவார்.

    Also Read:  இரண்டாம் தர இந்திய அணியை அனுப்பியது நம் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம் : அர்ஜுனா ரணதுங்கா காட்டம்

    ஷா-விடம் நல்ல திறமை உள்ளது, நெடிய எதிர்காலம் உள்ளது. அணியில் பிரிதிவி ஷா தேர்வு செய்யப்படவில்லை, ஆனால் டென்னிஸில் வைல்டு கார்டு மூலம் தகுதி பெறுவது போல் பிரிதிவி ஷா புஜாராவுக்குப் பதிலாக தகுதி பெறத் தகுந்தவர்தான்” என்று கூறுகிறார்.

    புஜாரா சொதப்பல்:

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் 18 போட்டிகளில் 841 ரன்களை 28 என்ற சராசரியில் எடுத்துள்ளார் புஜாரா. இறுதிப் போட்டியில் இந்திய அணி நன்றாகத் தொடங்கியும் ரிதமை காலி செய்யுமாறு லொட்டு வைத்து அறுத்தார் புஜாரா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் ஆகாஷ் சோப்ராவோ, இங்கிலாந்தில் புஜாரா, ரகானே நன்றாக ஆடுவார்கள் என்கிறார், ஆனால் இவர்கள் யாரும் கோலியின் சொதப்பல் பார்மை கேள்வி கேட்பதில்லை, அதைப்பற்றி பேசுவதில்லை. கடந்த 18 இன்னிங்ஸ்களில் கோலி என்ன கிழித்து விட்டார் என்பதையும் பேச வேண்டுமல்லவா?

    கோலிக்கு அளவுக்கு அதிகமாக அவரின் தகுதியை மீறிய மரியாதையை வர்ணனையாளர்களும் பத்திரிகைகளும் கடைப்பிடிப்பது ஏனென்று புரியாத புதிராக உள்ளது.
    Published by:Muthukumar
    First published: