Home /News /sports /

நல்ல காலம் பொறக்குது.. கோலிக்கு நல்ல காலம் பொறக்குது: குடுகுடுப்பைக்காரர் ஆன சேவாக்

நல்ல காலம் பொறக்குது.. கோலிக்கு நல்ல காலம் பொறக்குது: குடுகுடுப்பைக்காரர் ஆன சேவாக்

கோலி-சேவாக்

கோலி-சேவாக்

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சர்வதேச சதம் கூட அடிக்காத கோலி, இங்கிலாந்தில் கடுமையான சவாலை எதிர்கொள்கிறார், குறிப்பாக பேட்டிங்கில் அவரது ஃபார்ம் மோசமாக இருக்கும் ஒரு கட்டத்தில் கோலி இருந்து வருகிறார்.

    இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சர்வதேச சதம் கூட அடிக்காத கோலி, இங்கிலாந்தில் கடுமையான சவாலை எதிர்கொள்கிறார், குறிப்பாக பேட்டிங்கில் அவரது ஃபார்ம் மோசமாக இருக்கும் ஒரு கட்டத்தில் கோலி இருந்து வருகிறார்.

    கோலி கடைசியாக சர்வதேச சதம் அடித்தது 2019 நவம்பரில் - இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. அவரது ஃபார்மில் ஏற்பட்ட சரிவினால் ரவி சாஸ்திரி உட்பட பல முன்னாள் வீரர்களும் அவர் புத்துணர்ச்சியடைய ஓய்வு எடுத்துக் கொண்டு திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    இந்நிலையில் ஓய்வு பெற்ற அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் இது தொடர்பாக சோனி தொலைக்காட்சியில் கூறும்போது, “கடைசியாக கோலி எப்போது சதம் எடுத்தார் என்று நினைவிருக்கிறதா? எனக்கு நினைவில் இல்லை. இந்த எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் அவர் நிச்சயம் ஒருபெரிய சதத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்.

    அவருடைய மோசமான காலக்கட்டம் முடிந்தது, நல்ல காலம் பொறக்குது. பயிற்சி ஆட்டத்தில் 2வது இன்னிங்சில் அரைசதம் அடித்தார் கோலி. எனவே அவரிடமிருந்து பெரிய ஒரு சதத்தை எதிர்பார்க்கலாம்” என்று ஆரூடம் கூறியுள்ளார் சேவாக்.

    ஆனால் இங்கிலாந்து இப்போது ஆடிவரும் கிரிக்கெட் ஆட்டம், இந்திய அணியை பெரிய அளவில் பதம்பார்க்கும் என்றே தோன்றுகிறது, சிகப்புப் பந்து கிரிக்கெட்டில் எந்த ஒரு பயிற்சியும், போட்டி பயிற்சியும் இல்லாமல் இந்திய அணி சென்றிருக்கிறது. ஐபிஎல் ஆடினால் போதுமே? பிறகு எப்படியாவது இந்தத் தொடரை ஒப்பேற்றி விட்டால் தோற்றாலும் தொடர் ட்ரா என்று கூறிக்கொள்ளலாம்.

    நம் ஊடகங்கள் இருக்கும் வரை இந்திய அணிக்கு கவலையில்லை, என்ன மோசமாக ஆடினாலும் கோலி ஊர் சுற்றிய கதையையும் வலையில் ஷமி பந்தை அடித்தார் என்றும் கூறிக்கொண்டும், ரிஷப் பண்ட் அடித்த சிக்சரையும் கூறி பெருமை பேசி நம்மை நாமே சொரிந்து விட்டுக்கொள்ளலாம்.

    ஒரு பெரிய தொடருக்குச் செல்லும்போது அங்கு உள்ள முறையான கவுண்ட்டி அணியுடன் ஆடினால் இந்திய வீரர்களின் பார்மின் லட்சணம் என்னவென்று தெரியும். பயிற்சி ஆட்டம் என்ற பெயரில் தெரு கிரிக்கெட் போல் இரு அணிகளும் வீரர்களை கலந்துகட்டி ஆடிவிட்டு இதில் ரோஹித் சர்மாவை ஷமி வீழ்த்தினார், பிரசித் கிருஷ்ணாவை ஷுப்மன் கில் விளாசினார் என்று செய்தி கட்டி என்ன பயன் இருக்கப் போகிறது?

    இந்நிலையில் சேவாக் ஒரு குடுகுடுப்பைக் காரர் போல் கோலிக்கு நல்ல காலம் பொறக்குது என்று நள்ளிரவு நல்வாக்கு நல்கியுள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India Vs England, Virat Kohli, Virender sehwag

    அடுத்த செய்தி