ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

50 ஓவரில் 506 ரன்கள் குவித்த தமிழக அணி.. ஒரே போட்டியில் 9 சாதனைகளை முறியடித்த ஜெகதீசன்

50 ஓவரில் 506 ரன்கள் குவித்த தமிழக அணி.. ஒரே போட்டியில் 9 சாதனைகளை முறியடித்த ஜெகதீசன்

ஜெகதீசன் நாராயணன்

ஜெகதீசன் நாராயணன்

அதிரடியாக விளையாடிய ஜெகதீசன் நாராயணன், இந்த தொடரில் தொடர்ந்து 5-ஆவது சதத்தை அடித்தது மட்டுமில்லாமல், இந்த ஒரே போட்டியில் பல சாதனைகளை முறியடித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Bangalore [Bangalore], India

  இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை கிரிகெட் தொடரில் 38 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த கோப்பைக்கான ஒருநாள் கிரிகெட் போட்டி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக தமிழ்நாடு அணி இன்று பலபரிட்சை நடத்தியது.

  இதில் அதிரடியாக விளையாடிய ஜெகதீசன் நாராயணன், இந்த தொடரில் தொடர்ந்து 5-ஆவது சதத்தை அடித்தது மட்டுமில்லாமல், இந்த ஒரே போட்டியில் பல சாதனலைகளை முறியடித்துள்ளார்.

  • 277 ரன்கள் - இந்த போட்டியில் 141 பந்துகளில் 15 சிக்சர்கள், 25 பவுண்டரிகள் என மொத்தம் 277 ரன்களை எடுத்தார் ஜெகதீசன் நாராயணன். இதன் மூலம், லிஸ்ட் ஏ கிரிகெட் போட்டியில், ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகப்பட்ச ரன்கள் என்ற சாதனையை முறியடித்தார். இதற்கு முன்னர் ஏடி பிரௌன் எடுத்த 268 என்ற ஸ்கோரே அதிகபட்ச ரன்களாக இருந்தது.
  • லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் ஜெகதீசன். இதற்கு முன்னர்,குமார் சங்கக்கார(2014-2015), அல்விரோ பீட்டர்சன்(2015-2016), தேவ்தத் படிக்கல் (2020-2021) ஆகிய 3 பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து 4 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
  • ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் - ஜெகதீசன் நாராயணனினதிரடி ஆட்டத்தால், தமிழ்நாடு அணி 506 ரன்களை எடுத்தது. இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் ஒரு அணி 500 ரன்களுக்கு மேலாக எடுப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்னர் இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக அடித்த 498 என்ற ரன்களே சாதனையாக இருந்தது.
  • 114 பந்துகளில் இரட்டை சதம் - ஜெகதீசன் நாராயணன் தனது இரட்டை சதத்தை நிறைவு செய்ய 114 பந்துகள் எடுத்துக்கொண்டார். இதன் மூலம் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டின் சாதனையை சமன் செய்துள்ளார். டிராவிஸ் ஹெட்டும் இரட்டை சதம் அடிக்க 114 பந்துகள் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
  • ஸ்ட்ரைக் ரேட் 196.45  - இந்த போட்டியில் விளையாடிய ஜெகதீசன் நாராயணன், 141 பந்துகளில் 277 ரன்களை எடுத்தார். இதன் மூலம், அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஜெகதீசன். இதற்கு முன்னர் டிராவிஸ் ஹெட் 181.1 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியதே சாதனையாக இருந்தது.
  • 416 ரன்கள் பாட்னர்ஷிப் - தமிழக வீரர்கள் ஜெகதீசன் - சாய் சுதர்ஷன் ஜோடி, இன்றைய போட்டியில் முதல் விக்கெட் பாட்னர்ஷிப்பிற்கு 416 ரன்களை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னர் கிறிஸ் கெய்ல் - மார்லன் சேமியூல்ஸ் ஜோடி 372 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.
  • 5 சதங்கள் - விஜய் ஹசாரே கோப்பையில் தொடர்ச்சியாக 5 சதங்கள் எடுத்ததன் மூலம், புதிய சாதனையை படைத்துள்ளார் ஜெகதீசன் நாராயணன். இதற்கு முன்னர், விராட் கோலி (2008 - 2009), தேவ்தத் படிக்கல் (2020 - 2021), ப்ரித்வி ஷா (2020 - 2021), ருத்துராஜ் கெய்க்வாட் (2021 - 2022) ஆகிய நான்கு பேரும் இந்த தொடரில் 4 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
  • 15 சிக்சர்கள் - விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ஒரே போட்டியில் 15 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ஒரு போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார் ஜெகதீசன். இதற்கு முன்னர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (2019 - 2020) ஆம் சீசனில் 12 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
  • 799 ரன்கள் - இதுவரை ஜெகதீசன் 799 ரன்களை எடுத்துள்ளார். இந்த கோப்பையில் ஒரு வீரர் எடுக்கும் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னர் ப்ரித்வி ஷா 2020 - 2021 சீசனில் 827 ரன்களை எடுத்ததே சாதனையாக இருக்கிறது.
  Published by:Raj Kumar
  First published:

  Tags: Chennai Super Kings, CSK, IPL, Vijay Hazare, Vijay hazare trophy