முகப்பு /செய்தி /விளையாட்டு / மேனேஜர் ஊரில் இல்லை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்குத் தகுதி பெறாததற்கு ஜஸ்டின் லாங்கரின் விநோத காரணம்

மேனேஜர் ஊரில் இல்லை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்குத் தகுதி பெறாததற்கு ஜஸ்டின் லாங்கரின் விநோத காரணம்

ஜஸ்டின் லாங்கர்.

ஜஸ்டின் லாங்கர்.

ஆஸ்திரேலிய அணி மேலாளர் கேவின் டோவி விடுப்பில் சென்றதால் தங்களுக்கு இந்த ஸ்லோ ஓவர் ரேட் விவகாரமே தெரியாமல் போய்விட்டது என்கிறார் ஜஸ்டின் லாங்கர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரின் போது குறித்த நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்காமல் 4 புள்ளிகளை இழந்ததால் இன்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாலர் ஜஸ்டின் லாங்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஸ்லோ ஓவர் ரேட்டுக்காக ஆஸ்திரேலியா 4 புள்ளிகளை இழந்தது. இது தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள விஷயம் ஆனால் அதில் கோட்டை விட்டோம் என்று லாங்கர் வருந்துகிறார்.

ஒரு மணி நேரத்தில் 15 ஓவர்கள் வீச வேண்டும், ஆனால் டிம் பெய்ன் கேப்டன்சியில் மெல்போர்னில் 13 ஓவர்களையே ஆஸ்திரேலியா வீசியது. இதனால் 4 புள்ளிகளை இழந்த ஆஸ்திரேலியா 69.2 புள்ளிகளுடன் நியூஸிலாந்தின் 70 புள்ளிகள் மற்றும் இந்தியாவின் 72 புள்ளிகளுடன் போட்டி போட முடியாமல் போனது, இதனால் சவுத்தாம்ப்டனில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஆஸ்திரேலிய அணி மேலாளர் கேவின் டோவி விடுப்பில் சென்றதால் தங்களுக்கு இந்த ஸ்லோ ஓவர் ரேட் விவகாரமே தெரியாமல் போய்விட்டது என்கிறார் ஜஸ்டின் லாங்கர்.

”மேனேஜர் ஊரில் இல்லை போன்ற முட்டாள்தனமான காரணங்களை கூறுகிறேன் என்று எனக்கே தெரிகிறது. ஆனால் அதுதான் உண்மை கேவின் டோவி ஊரில் இல்லாமல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்குப் போய் விட்டார்.

மெல்போர்ன் டெஸ்ட் முடிந்தவுடன் தான் எங்களுக்கே தெரியும் ஸ்லோ ஓவர் ரேட் என்பது. இது உண்மையில் நாங்கள் செய்த மிகப்பெரும் தவறு.

ஆனால் இது எங்கள் வாய்ப்பையே தட்டிப் பறித்து விட்டது என்பதை இப்போதுதான் உணர்கிறோம்.

ஆனால் இதெல்லாம் முடிந்த பிறகுதான் நான் வீரர்களிடம் ஸ்லோ ஓவர் ரேட் நம் இறுதி வாய்ப்பைப் பாதிக்கலாம் என்று கூறினேன். அதனால் சிட்னி, பிரிஸ்பனில் இப்படி நடக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.

ஓவர் ரேட் விவகாரம் இவ்வளவு சீரியஸாகும் என்று எதிர்பார்க்கவில்லை, ஆனால் அதன் பிறகு அது எவ்வளவு சீரியஸ் என்பதை உணர்ந்தோம். தென் ஆப்பிரிக்க தொடரை கோவிட் காரணமாக ரத்து செய்ததை நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இந்த ஸ்லோ ஓவர் ரேட் நம் கையில் இருக்கும் விஷயம்.

முதலில் ஸ்லோ ஓவர் ரேட்டுக்கு பைன் போட்டால் பரவாயில்லை என்று நினைத்தோம் ஆனால் இன்று எங்கள் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கே அது உலை வைத்து விட்டதை நினைத்தால் ஜீரணிக்க முடியவில்லை” என்றார் ஜஸ்டின் லாங்கர்.

First published:

Tags: India vs Australia, Justin Langer, Melbourne