முகப்பு /செய்தி /விளையாட்டு / “தேவைப்பட்டால் தொடக்கவீரராக களமிறங்க ரெடி“ -அனுமன் விஹாரி நம்பிக்கை

“தேவைப்பட்டால் தொடக்கவீரராக களமிறங்க ரெடி“ -அனுமன் விஹாரி நம்பிக்கை

ஹனுமன் விஹாரி

ஹனுமன் விஹாரி

  • Last Updated :

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான அனுமன் விஹாரி டெஸ்ட் போட்டிகளில் தேவைப்பட்டால் தொடக்க ஆட்டக்காரராக கூட களமிறங்க தயாராக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது.

நியூசிலாந்து - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கு முன் நியூசிலாந்து லெவன் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் இளம் வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

தொடக்க வீரர்கள் அகர்வால் 1 ரன்னிலும், ப்ரிதிவ் ஷா மற்றும் சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல ஆட்டமிழந்தனர்.  5 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புஜாராவும் விஹாரியும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

குறிப்பாக தனது இன்னிங்சில் 3 சிக்சர்களை பறக்கவிட்டு 182 பந்துகளில் 101 ரன்கள் குவித்து அசத்தினார் விஹாரி. ஆட்டநேரத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு பேட்ஸ்மேனாக எந்த வரிசையிலும் களமிறங்க தான் தயாராக இருப்பதாகவும், அணி நிர்வாகத்திற்கு தான் தொடக்க ஆட்டக்காரராக தேவைப்பட்டால் அதற்கும் தயாராக இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் கடினமான நியூசிலாந்து சூழலில் நிலைத்து நின்று ஆடியது சந்தோசமாக உள்ளதாகவும் மகிழ்ச்சி கூறி உள்ளார்.

top videos

    First published:

    Tags: Cricket