பெங்களூருவின் பவுலிங் படுமோசம்... கலாய்த்த ஹர்திக் பாண்டியா!

#RCB's poor bowling in powerplay cost them the game: MI's #HardikPandya | 6 பந்துகளில் 37 ரன்கள் விளையாசிய ஹர்திக் பாண்டியா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

news18
Updated: April 16, 2019, 6:22 PM IST
பெங்களூருவின் பவுலிங் படுமோசம்... கலாய்த்த ஹர்திக் பாண்டியா!
பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா. (BCCI)
news18
Updated: April 16, 2019, 6:22 PM IST
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் படுமோசமாக பந்துவீசினார்கள் என மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய மும்பை அணி, ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால், 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

16 பந்துகளில் 37 ரன்கள் விளையாசிய ஹர்திக் பாண்டியா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றியின் மூலம், 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் மும்பை அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.

வெற்றிக்குப் பிறகு, ஹர்திக் பாண்டிய பேசுகையில், “அற்புதமான வெற்றி. நல்வாய்ப்பாக எங்களது தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். அதனால், வெற்றி பெறுவது எளிதாக இருந்தது. பவர் ப்ளேயில் பெங்களூரு பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசவில்லை. அப்போதே அவர்கள் போட்டியை இழந்துவிட்டதாக நினைத்தேன்” என்று கூறினார்.

சி.எஸ்.கே-வுக்கு கடல் கடந்து பெருகும் ஆதரவு... கிரிக்கெட் வீரர்கள் உற்சாகம்!

தல தோனியின் ஸ்டைலை பின்பற்றும் ரோகித் சர்மா!

அரசியலால் பிரிந்து நிற்கும் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் குடும்பம்!

பெங்களூருவை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது மும்பை அணி!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...