#RCBvRR | இது அப்படியே நடந்தால்... ப்ளே ஆஃப் சுற்றில் பெங்களூரு!

#RCB's #Endgame: How #ViratKohli's men can still qualify for #IPL2019playoffs | 12 புள்ளிகளுடன் பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்புள்ளது. #RCBvRR

news18
Updated: April 30, 2019, 5:56 PM IST
#RCBvRR | இது அப்படியே நடந்தால்... ப்ளே ஆஃப் சுற்றில் பெங்களூரு!
பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி. (Twitter)
news18
Updated: April 30, 2019, 5:56 PM IST
நடப்பு ஐ.பி.எல் தொடரில் எஞ்சியுள்ள லீக் போட்டிகளில் முக்கிய திருப்பங்கள் நடந்தால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும்.

நடப்பு ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இந்த வாரத்துடன் முடிவடைகிறது. அனைத்து அணிகளும் தலா 12 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

கேப்டன் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 4 வெற்றி, 8 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கிறது. இந்த அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறாதா என அந்த அணி ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


RCB Team, BCCI
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. (BCCI)


எஞ்சியுள்ள லீக் போட்டிகளில் முக்கிய திருப்பங்கள் நடந்தால், பெங்களூரு அணிக்கு ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும் என தெரியவந்துள்ளது.

எஞ்சியுள்ள போட்டிகளின் முடிவு இப்படி இருக்க வேண்டும்:

Loading...

ஏப்ரல் 30 : RCB vs RR - பெங்களூரு வெற்றி பெற வேண்டும்
மே 01 : CSK vs DC – யார் வெற்றி பெற்றாலும் பிரச்னை இல்லை
மே 02: MI vs SRH – மும்பை வெற்றி பெற வேண்டும்
மே 03: KXIP vs KKR – பஞ்சாப் வெற்றி குறைந்த ரன்ரேட்டில் வெற்றி பெற வேண்டும்
மே 04: DC vs RR – டெல்லி வெற்றி பெற வேண்டும்
மே 04: RCB vs SRH – பெரிய ரன்ரேட்டில் பெங்களூரு வெற்றி பெற வேண்டும்
மே 05: KXIP vs CSK – பெரிய ரன்ரேட்டில் சென்னை வெற்றி பெற வேண்டும்
மே 05: MI vs KKR – மும்பை வெற்றி பெற வேண்டும்

மேலே குறிப்பிட்டபடி போட்டிகளின் முடிவுகள் அமைந்தால் 12 புள்ளிகளுடன் பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்புள்ளது. இதில், சிறு மாற்றம் நிகழ்ந்தாலும் பெங்களூரு அணி அடுத்த சுற்று வாய்ப்பை மறந்துவிட வேண்டியதுதான்.

ஹிட்மேன் ரோகித் சர்மாவுக்கு பிறந்தநாள்... ட்விட்டரில் வாழ்த்து மழை!

நான் ஓரினச்சேர்க்கையாளரா? பிரபல கிரிக்கெட் வீரர் அதிரடி விளக்கம்!

கோமதிக்கு ஊக்கத்தொகையாக ரூ.15 லட்சம் வழங்கியது அதிமுக!

பேட்ஸ்மேன்களை கடுப்பாக்கிய மன்கட் முயற்சி... அஸ்வினை எச்சரித்த அம்பயர்...!

ஐ.பி.எல் தொடரில் இருந்து வார்னர், பேர்ஸ்டோவ் விலகல்... ஹைதராபாத் ரசிகர்கள் அதிர்ச்சி!

கே.எல்.ராகுல் அதிரடி வீண்... பஞ்சாபை வீழ்த்தியது ஹைதராபாத்!

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...