ஒரு ரன்னில் சதத்தை தவற விட்ட கிறிஸ் கெயில்... பெங்களூரு அணிக்கு 174 ரன்கள் இலக்கு

கிறிஸ் கெயில் 99 ரன்களுடனும், மந்தீப் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Prabhu Venkat | news18
Updated: April 14, 2019, 12:01 PM IST
ஒரு ரன்னில் சதத்தை தவற விட்ட கிறிஸ் கெயில்... பெங்களூரு அணிக்கு 174 ரன்கள் இலக்கு
ஐபிஎல்
Prabhu Venkat | news18
Updated: April 14, 2019, 12:01 PM IST
பெங்களூரு அணிக்கு 174 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி.

பஞ்சாப்-பெங்களூரு அணிகள் மோதும் லீக் போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் விராட் கோலி,  பந்துவீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெயில், ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 66 ரன்களை சேர்த்தது. ராகுல் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த மாயன்க் அகர்வால் 15 ரன்களிலும், சர்ஃபராஜ் கான் 15 ரன்களிலும், சாம் குர்ரான் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

பஞ்சாப் வீரர்கள் அடுத்ததடுத்து ஆட்டமிழக்க, பொறுப்பாக விளையாடிய கிறிஸ் கெயில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். இறுதியில் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுளை இழந்து 173 ரன்களை எடுத்தது. கிறிஸ் கெயில் 99 ரன்களுடனும், மந்தீப் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

பெங்களூரு அணி சார்பில் சாஹல் 2 விக்கெட்டையும், சிராஜ், மோயின் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 173 ரன்களை அடித்தது.

Also watch..


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...