பெங்களூரு அணிக்கு 6-வது இடம்

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது

பெங்களூரு அணிக்கு 6-வது இடம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. (BCCI)
  • News18
  • Last Updated: April 3, 2019, 2:40 PM IST
  • Share this:
ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்ததில் ராயஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6-வது இடத்தை பிடித்துள்ளது.

2019 ஐபிஎல் தொடர் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் பெங்களூரு-ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்தத் தொடரில் இரு அணிகளும் இதுவரை விளையாடிய போட்டிகளில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாததால் முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்தது. பெங்களூ அணியில் அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 67 ரன்கள் அடித்தார்.


இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு ரஹானே, பட்லர் ஜோடி 60 ரன்களை சேர்த்தது. கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் 5-வது பந்தில் சிக்ஸர் அடித்து ராகுல் த்ரிபதி ராஜஸ்தான் அணிக்கு முதல் வெற்றியை பெற்றுத் தந்தார்.

ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்ததில் ராயஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6-வது இடத்தை பிடித்துள்ளது.

தொடர் தோல்விகளை சந்தித்த அணிகள்


ஆண்டு அணி முறை
2013 டெல்லி 6
2012 ஹைதராபாத் 5
2014 மும்பை 5
2008 மும்பை 4
2015 மும்பை 4
2019 பெங்களூரு 4

 

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:

பஞ்சாப் அணி செய்த ஹாட்ரிக் சாதனைகள்!


#KXIPvDC: ரன் எடுக்காமல் சாதனை படைக்க முடியுமா?


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also watch

First published: April 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading