Home /News /sports /

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு?- ரசிகர்கள் அதிர்ச்சி

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு?- ரசிகர்கள் அதிர்ச்சி

ஜடேஜா.

ஜடேஜா.

டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக ஆடிவரும் நிலையிலேயே ரவீந்திர ஜடேஜா அதிலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக ஆடிவரும் நிலையிலேயே ரவீந்திர ஜடேஜா அதிலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    33 வயதாகும் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் 2,195 ரன்களை 33.76 என்ற சராசரியில் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 232 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்தியக் குழிப்பிட்ச்களின் தாதா பவுலர் ஜடேஜா என்றால் மிகையாகாது.

    டெஸ்ட் போட்டிகளில் 44 டெஸ்ட்களில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இடது கை பவுலர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். ஜடேஜா தேவையான போது ரன்களையும் விக்கெட்டுகளையும் பெற்றுத்தரும் பயனுள்ள ஆல்ரவுண்டர். பீல்டிங்கில் எந்த வடிவத்திலும் அசத்துபவர் ஜடேஜா.

    அயல்நாட்டில் ஆடும்போது கூட அஸ்வினை உட்கார வைத்தாலும் கோலி ஜடேஜாவை உட்கார வைக்க மாட்டார். இந்நிலையில் ஜடேஜாவின் சக வீரர் ஒருவர் தைனிக் ஜாக்ரன் பத்திரிகையில் கூறும்போது, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஜடேஜா விரைவில் குட்பை சொல்வார் என்றார். நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியின் போது முன் கையில் அடிபட்டு வீங்கியது. இதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் உட்கார்ந்தார்.

    இதே பிரச்சனையில்தான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஜடேஜா இல்லை. ரசிகர்கள் இந்த ராக்-ஸ்டார் ஜடேஜாவை விரைவில் களத்தில் எதிர்பார்க்க அவரோ டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் இனி தலை வைத்துப் படுக்க மாட்டேன் என்று கூறப்போகிறார்.

    Also Read: என்னை நீக்க முடியாது; இப்படி சிக்கிட்டீங்களேண்ணே!- ஜோ ரூட்டுக்குக் கேட்ட ஜாக் லீச்சின் மைன்ட் வாய்ஸ்

    இவருக்கெல்லாம் குருநாதரான தோனி தன் வர்த்தக உலகத்தைக் கருத்தில் கொண்டு டி20 பணமழை கிரிக்கெட்டையும் கருத்தில் கொண்டு 2014-ல் ஆஸ்திரேலியாவில் பாதியிலேயே இந்திய அணியை அம்போவென்று விட்டு விட்டு தோனி ரிட்டையர் ஆகவில்லையா, அதே பாணியைத்தான் சிஷ்யகோடிகளும் கடைப்பிடிக்கும். 4 ஓவர் வீசி கோடிக்கணக்கில் சம்பாதிப்பதை விட்டு நாட்டுக்காக என்றெல்லாம் அபத்தமாகப் பேசி வெயிலில் 5 நாள் மைதானம் நெடுக ஓட வேண்டுமா என்று ஜடேஜா யோசித்திருக்கலாம்.

    இதையும் படிங்க: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: 2-0-வுக்குப் பிறகு வெற்றியை நழுவ விட்ட இந்தியா

    ஆனால் ஜடேஜா தரப்பிலிருந்து இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை இல்லை.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ravindra jadeja, Test cricket

    அடுத்த செய்தி