ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது விதிகளை மீறி நடந்ததால் ரவிந்திர ஜடேஜாவுக்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாமா அபராதம் விதிப்பார்கள் என்ற அதிர்ச்சியில் உள்ளார் ரவிந்திர ஜடேஜா. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல் என 3 ஆல்ரவுண்டர்கள் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களில் ஜடேஜா இந்த போட்டியில் 70 ரன்கள் எடுத்ததுடன், 2 இன்னிங்ஸ்களில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்டில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் ஆஸ்திரேலியா, இந்தியாவிடம் மரண அடி வாங்கியுள்ளது. இந்நிலையில் விதிகளை மீறியதால் ரவிந்திர ஜடேஜாவுக்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியின்போது முகம்மது சிராஜிடம் இருந்து வலி நிவாரணியை பெற்ற ரவிந்திர ஜடேஜா அதனை வலது ஆட்காட்டி விரலில் எடுத்து, இடது கையில் தடவியுள்ளார். ஐசிசி விதி 41.3-ன் படி, இவ்வாறு செய்வது விதி மீறல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை கவனத்தில் கொண்டு ஜடேஜாவுக்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் அதிர்ச்சியில் உள்ளாராம் ரவிந்திர ஜடேஜா. முதல் டெஸ்டின் ஆட்ட நாயகன் விருது ஜடேஜாவுக்கு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்டில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் ஆஸ்திரேலியாவை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. 3ஆவது போட்டி மார்ச் 1ஆம் தேதி தர்மசாலாவிலும், கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 9ஆம் தேதி அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket