ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மனைவிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக வங்கதேச தொடரில் இருந்து ஜடேஜா விலகலா?

மனைவிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக வங்கதேச தொடரில் இருந்து ஜடேஜா விலகலா?

ரவீந்திர ஜடேஜா மற்றும் அவரது மனைவி

ரவீந்திர ஜடேஜா மற்றும் அவரது மனைவி

Ravindra Jadeja | வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக டி20 உலககோப்பை தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. இதனால் இந்திய அணி ஆல்ரவுண்டர்கள் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு தொடரில் அரையிறுதி சுற்றுடன் வெளியேறியது.

  காயத்தில் இருந்து சிகிச்சை பெற்று மீண்டு வந்த ஜடேஜா உடல்தகுதி செய்யும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். ஜடேஜா முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக நியூசிலாந்து தொடரில் கூட அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. இதனால் வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் ஜடேஜா இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் ஜடேஜா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

  காயம் இன்னும் குணமடையடைததால் வங்கதேச தொடரில் தன்னால் பங்கேற்க முடியாது என பிசிசிஐயிடம் ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதி என இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் ஜடேஜாவின் மனைவி ரீவாபா ஜடேஜா பாஜக சார்பாக ஜாம்நகர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

  இதையும் படிங்க: குழந்தை இயேசு சிலைக்கு கால்பந்து அணி ஜெர்சி.. வித்தியாசமாக பிரார்த்தனை செய்த ரசிகர்கள்!

  தனது மனைவிக்காக வாக்கு சேகரிப்பில் ஜடேஜா ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் ஜடேஜா மனைவிக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற நோக்கில் வங்கதேச தொடரில் காயத்தை காரணம் காட்டி பங்கேற்க முடியாது என கூறியுள்ளதாக நெட்டிசன்கள் தற்போது விமர்சித்து வருகின்றனர்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Gujarat, India vs Bangladesh, Ravindra jadeja