ஷூ லேசை கூட குனிந்து கட்ட முடியாமல் இருந்தார் - அஸ்வின் மனைவியின் உருக்கமான பதிவு

ஷூ லேசை கூட குனிந்து கட்ட முடியாமல் இருந்தார் - அஸ்வின் மனைவியின் உருக்கமான பதிவு

மனைவி ப்ரீத்தி உடன் அஸ்வின்

முதுது வலியால் சிரமப்பட்ட பல வலிகளை தாங்கி கொண்டே இந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாடி உள்ளார் என்பது அவரது மனைவி ப்ரீத்தியின் ட்வீட் மூலம் தெரயவந்துள்ளது.

 • Share this:
  சிட்னி டெஸ்டில் நிதானமாக விளையாடி போட்டியை டிரா செய்ய மிகவும் போராடிய ரவி சந்திரன் அஸ்வின், இன்று காலை ஷூ லேச கூட குனிந்து கட்ட முடியாமல் இருந்தார் என்று அவரது மனைவி ப்ரீத்தி ட்விட்டரில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

  சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வீரர்கள் போராடி டிரா பெற செய்தனர். 407 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணி வீரர்கள் கடைசி நாளில் பல சிரமங்களை கடந்து போட்டியை டிரா செய்தனர்.

  நிறவெறியை தூண்டும் ரசிகர்கள் ஒருபுறம், குறுக்கு வழியிலாவது வெற்றியை பெற்றுவிடலாம் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் ஒருபக்கம் என இந்திய வீரர்களுக்கு சிட்னி டெஸ்ட் மிகப் பெரிய சவாலாகவே அமைந்தது. சிட்னி டெஸ்ட் டிராவில் முடிய அஸ்வினின் பேட்டிங்கும் முக்கிய பங்காக இருந்தது. முதுது வலியால் சிரமப்பட்ட பல வலிகளை தாங்கி கொண்டே இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார் என்பது அவரது மனைவி ப்ரீத்தியின் ட்வீட் மூலம் தெரயவந்துள்ளது.

  அஸ்வின் மனைவி ப்ரீத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், “அஸ்வின் நேற்று தூங்கும் போதே முதுகு வலி தாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். காலையில் எழுந்த அவர் ஷூ லேச கூட கட்டமுடியாமல் சிரமப்பட்டார். அப்படி இருந்த ஒருவர் இப்படி விளையாட எது காரணமாக இருந்தது என்று தெரியவில்லை“ என்றுள்ளார்.  சிட்னி டெஸ்ட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் அஸ்வின் 128 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகளும் அடங்கும். ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு அஸ்வின் உடலை அவ்வப்போது பதம் பார்த்தாலும் சற்றும் அசாரமால் நிலைத்து நின்று ஆடினார்.
  Published by:Vijay R
  First published: