ஐ.பி.எல் வீரர்கள் வாக்களிக்க சிறப்பு அனுமதி வேண்டும்...! மோடிக்கு அஸ்வின் கோரிக்கை

#RavichandranAshwin Tweets Request To #PMModi In #IPL Season | நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரபலங்களை ட்விட்டரில் டேக் செய்து வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

news18
Updated: March 25, 2019, 6:35 PM IST
ஐ.பி.எல் வீரர்கள் வாக்களிக்க சிறப்பு அனுமதி வேண்டும்...! மோடிக்கு அஸ்வின் கோரிக்கை
அஸ்வின் மற்றும் பிரதமர் மோடி.
news18
Updated: March 25, 2019, 6:35 PM IST
ஐ.பி.எல் தொடரில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் வாக்களிப்பது தொடர்பாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், பிரதமர் மோடிக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

வாக்காளர்


இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரபலங்களை ட்விட்டரில் டேக் செய்து வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

கிரிக்கெட் வீரர்களான ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரையும் டேக் செய்து பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தார்.



அந்தப் பதிவுக்குப் பதிலளித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், “வாக்களிப்பதே நமது ஜனநாயகத்தின் ஆதாரப்புள்ளி என்பது குறித்து நான் எப்போதும் சிந்திப்பதுண்டு.

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் வசிக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாக்களித்து, சரியான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.



அதேபோல், மற்றொரு பதிலில், “ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் அவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகிலேயே தங்கள் வாக்குகளைச் செலுத்த அனுமதி அளிக்கும்படி கோரிக்கை வைக்கிறேன்” என அஸ்வின் பதிவிட்டிருந்தார்.



இந்த ட்வீடுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் ட்வீட் செய்து வருகின்றனர்.

VIDEO | 'ஒத்த சொல்லால' பாடலுக்கு நடனமாடிய தோனியின் மகள் ஸிவா..!

VIDEO: உன்னோட பிளான் என்கிட்ட நடக்காது... கேதர் ஜாதவை கலாய்த்த தோனி...!

ஃபிஞ்ச் அதிரடியில் வீழ்ந்த பாகிஸ்தான் அணி!

தோனியின் 6 ஆண்டுகள் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

இமாலய மைல்கல்லை விரட்டும் சிக்சர் மன்னன் கெய்ல்... இன்னும் 6 ரன்கள்தான் தேவை!

Also Watch...

First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626